மாஜி அமைச்சரை சாடிய அ.தி.மு.க., நிர்வாகி
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க., மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், கடுமையாக போராடினார். அதற்காக கடந்த ஓராண்டில் பல நலத்திட்டங்களை செய்து வந்தார். ஆனால், கூட்டணி சார்பில் பா.ம.க.,வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் மாவட்ட துணை தலைவர் பாடி செல்வம் போட்டியிடுகிறார். அவரது அறிமுக கூட்டம் நேற்று முன்தினம், பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில், அ.தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன், பா.ம.க., மாவட்ட செயலர் வெங்கடேஸ்வரன், பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி மாவட்ட செயலர்கள், நிர்வாகிகள் பேசினர். டி.ஆர்.அன்பழகன் பேசும்போது, 'எனக்கு சீட் கிடைக்காததற்கு காரணம், மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன் தான்' என்றார். இதனால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. செய்வதறியாமல், பா.ம.க.,வினர் திகைத்து நின்றனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முன்னிலையிலே தகராறில் ஈடுபட்டதால், அக்கட்சியினர் தேர்தல் பணியில் ஒத்துழைப்பு தருவரா எனவும் கலக்கம் அடைந்துள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm