புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணியில், பா.ஜ.,விற்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, பா.ஜ., நேற்று வெளியிட்டது. புதுச்சேரியில், நீண்ட இழுபறிக்கு பின், தே.ஜ., கூட்டணியில் நேற்று முன்தினம் தொகுதி பங்கீடு உறுதியானது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்., - 16; பா.ஜ., - 10; அ.தி.மு.க., - 2; லட்சிய ஜனநாயக கட்சி - 2 என ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என்ற ஒதுக்கீடு நேற்று முடிவானது. அதன்படி, பா.ஜ.,விற்கு மண்ணாடிப்பட்டு, ஊசுடு (தனி), காலாப்பட்டு, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, திருநள்ளாறு, நிரவி, காரைக்கால் (வடக்கு) மாகி ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ., நேற்று வெளியிட்டது. மண்ணாடிப்பட்டு தொகுதியில் தற்போதைய பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm