மார்ச் 10ல் தமிழகம் வருகிறது மத்திய படை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் சிஏபிஎப் படைகள் மார்ச் 10 ல் தமிழகம் வர உள்ளன.தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடப்பட்டுள்ளது. துணை தேர்தல் கமிஷனர்கள் தமிழகம் வந்து தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து விட்டு புதுடில்லி திரும்பி உள்ளனர். இதனால், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என கட்சிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், தமிழக தேர்தல் பணிக்கு சிஏபிஎப் அமைப்பின் 50 படைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கி உள்ளது. இந்த படைகள் வரும் 10ம் தேதி தமிழகம் வர உள்ளன.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm