சாதனைகள், கொள்கைகள் இல்லை... ஆபாசங்கள், அவதூறுகள் உண்டு; அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சாதனைகள், கொள்கைகள் இல்லாததால் ஆபாசங்கள், அவதூறுகளை அள்ளி இறைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று அதிமுகவை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவரது பதிவு; இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்.தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm