சட்டம் ஒழுங்கு கைமீறியதை ஸ்டாலின் குறிப்பிட்டாரா? கேட்கிறார் ராமதாஸ்
சென்னை: சட்டம் ஒழுங்கு கைமீறியதை ஸ்டாலின் குறிப்பிட்டாரா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன், நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில், ஆயுதங்களுடன் வந்த கும்பல் இருவரை வெட்டிக் கொன்றது. அதைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்திலும், அரிவாளுடன் சென்ற கும்பல் மக்களை தாக்கியுள்ளது. கோவை, சூலுாரில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிய, இருவரை பிடிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டரை, அரிவாளால் வெட்டியுள்ளனர்.சட்டம் -ஒழுங்கு இந்த அளவுக்கு மோசமாக உள்ள நிலையில், காங்கிரசுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதும், 'எல்லாம் முடிந்து விட்டது' என முதல்வர் ஸ்டாலின் கையசைத்தது, சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. இதை முதல்வரே, பெருமையாகவும் கூறி வருகிறார். தமிழகத்தில், சட்டம் -ஒழுங்கு கை மீறி போய் விட்டது என்பதை தான், 'எல்லாம் முடிந்து விட்டது' என, கையசைப்பின் வாயிலாக ஸ்டாலின் தெரிவித்தாரா? இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm