/ செய்திகள் / தியாகராஜனுக்கு திடீர் ட்விஸ்ட் ஹாட்ரிக் வெற்றி சாத்தியமா?

தியாகராஜனுக்கு திடீர் ட்விஸ்ட் ஹாட்ரிக் வெற்றி சாத்தியமா?

மதுரை மாவட்டம் மத்திய தொகுதியில் தி.மு.க., சார்பில் இரண்டு முறை போட்டியிட்டு தற்போது 'ஹாட்ரிக்' வெற்றியை பறிக்க காத்திருக்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க., அரசு ஆட்சி அமைந்தததும், 'பவர்புல்' அமைச்சராக வலம் வந்தவர் பழனிவேல் தியாகராஜன். இவருக்கு முதலில் நிதித்துறை ஒதுக்கப்பட்டது. ஆடியோ சர்ச்சை ஒன்றில் சிக்கி நிதித்துறை பறிபோனது.மாற்றம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஒதுக்கப்பட்டது, தி.மு.க.,வின் ஐந்தாண்டு கால ஆட்சியில் இதுவரை மூன்று முறை அமைச்சரவை மாற்றத்திலும் இதே துறை தான் இவருக்கு ஒதுக்கப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நட்பால் இன்றும் கட்சியில் தொடர்கிறார். மதுரையில் இவருக்கும், அமைச்சர் மூர்த்தி, நகர மாவட்ட செயலர் தளபதி எம்.எல்.ஏ., ஆகியோருக்கும் இடையே உள்ள 'முக்கோண முரண்பாட்டால்' கட்சியினர் கோஷ்டிகளாக கிடக்கின்றனர். மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்த இவரது ஆதரவாளர்கள், மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் சிக்கி பதவியை இழந்தனர். கட்சியினரை செல்வாக்குஅரவணைக்காதது போன்ற காரணங்களால் கட்சிக்குள் இவரது செல்வாக்கு குறைய தொடங்கியது. இந்த தேர்தலில் இவர் வெற்றி சவாலாக இருக்கும் என கட்சி தலைமைக்கு 'ரிப்போர்ட்' அனுப்பியது ஒரு குழு.இதற்கிடையே, அழகிரி ஆதரவாளராக இருந்து அ.தி.மு.,கவில் சேர்ந்த முன்னாள் துணைமேயர் மன்னன், இவருக்கு எதிராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை அப்படி நடந்தால், தியாகராஜன் வெற்றிக்கு திணறும் சூழல் ஏற்படும். ஆனால் நெருக்கடிமதுரை மத்திய தொகுதி, அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதனால், வெற்றி உறுதி என அமைச்சர் தியாகராஜன் சற்று நிம்மதி அடைந்தார். இந்நிலையில் அக்கட்சி வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி அறிவிக்கப்பட்டுள்ளது பேரிடியாக மாறிவிட்டது. சினிமா கவர்ச்சியால் இவருக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்கின்றனர் கட்சியினர். இதையெல்லாம் தாண்டி சினிமா கவர்ச்சியை காலி செய்து 'ஹாட்ரிக்' வெற்றிக்கு முன்னேற வேண்டிய நிலை தியாகராஜனுக்கு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankar
ஏப் 01, 2026 17:12

இந்த முறை திமுக வாசவுட் என்பது உரியன ஒன்று - அதில் இவர் மட்டும் எப்படி தப்புவார்


BALA KRISHNAN
ஏப் 02, 2026 14:03

வெயிட் & சி. யாரு வாஷ் அவுட் ஆகப்போறா என்று ????