அரசியலில் இப்போது விசுவாசம் குறைந்து விட்டது
பா.ம.க.,வைச் சேர்ந்த, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் முயற்சியால், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணிக்கு, நினைவு மண்டபம், உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, ஸ்டாலின் விசுவாசத்தோடு இருந்து வருகிறார். அரசியலில் இப்போதெல்லாம் விசுவாசம் குறைந்து விட்டது. ஆனால், இந்த நினைவு மண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற அனைவரும் அந்த கால அரசியல்வாதிகள் என்பதால், முன்பு உள்ளதை நினைத்து பார்க்கக் கூடியவர்கள். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலத்திற்கு பின், தோழமை கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் பா.ம.க., இருந்தது. ஆனாலும், இன்றும் நன்றி மறவாமல், கோ.சி., மணிக்கு சிலையுடன் நினைவு மண்டபத்தை ஸ்டாலின் அமைத்து தந்துள்ளார். - நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm