எம்.ஜி.ஆர்., -- ஜெ., போல விஜய்க்கும் அநியாயம்
முதல்வர் ஸ்டாலின் தொகுதியான, சென்னை கொளத்துாரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் பெரிய அலை உருவாகி, பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. ஆனால், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. கரூரை போல், மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த, கொளத்துாரில் உள்ள அமைச்சரும் முயற்சி செய்தார். நாங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டோம். தேர்தல் அலுவலர்களாக, தி.மு.க., காரர்களை வைத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் பேச்சைக் கேட்டு, போலீஸ் செயல்படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை முடக்க நினைத்து , அவர்களுக்கு என்ன அநியாயம் செய்தனரோ, அது விஜய்க்கும் நடக்கி றது. முதல்வரிடம் பேசியே, போலீஸ் கமிஷனர் முடிவு எடுக்கிறார்; தலைமை தேர்தல் அதிகாரி பேச்சை போலீஸ் கேட்பதில்லை. விஜய் வேட்புமனு தாக்கல் செய்தவுடன், ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. - ஆதவ் அர்ஜுனா தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலர், த.வெ.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm