/ செய்திகள் / அதிகார பகிர்வு அவசியம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங் எம்பி மாணிக்கம் தாகூர்
அதிகார பகிர்வு அவசியம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங் எம்பி மாணிக்கம் தாகூர்
நமது நிருபர்
வரும் சட்டசபை தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதை மேற்கோள் காட்டி, ''அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை'' என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.தமிழகத்தில் ஆட்சியில் பங்கு , அதிகாரத்திலும் பங்கு என்று திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் விமர்சித்து வருகிறார். அவர், ''கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது , அதிகார பங்கீட்டுக்கான நேரம் இது'' என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறார்.ஆட்சியில் பங்கு
இதனை மேற்கோள் காட்டி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 2021ல் 173ல் போட்டியிட்டு 133 வெற்றி. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். ஆட்சியில் அதிகார பகிர்வு அவசியம் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் மாணிக்கம் தாகூர் தெளிவுப்படுத்தி உள்ளார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm