/ செய்திகள் / சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி

சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம், வரும் 13ல் நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக அனுமதி கேட்டு, போலீசில் கடந்த, 3ல் கடிதம் வழங்கப்பட்டது. அதேபோல், மாநகர் போலீஸ் கமிஷனரிடம், கடந்த, 4ல் நிர்வாகிகள் மனு அளித்தனர். இந்த மனு குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.இந்நிலையில், பிப்.,13ல் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.இதன்படி* 3 மணி நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும்* நண்பகல் 12 முதல் மதியம் 3 வரை நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.* 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. * போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.* கர்ப்பணிகளுக்கு அனுமதி இல்லை.* குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்பது போன்ற 51 கட்டுப்பாடுகளை போலீசார் விதித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !