/ செய்திகள் /  பெரம்பூர் தொகுதியில் விஜயை வீழ்த்த 1,000 பேர்

 பெரம்பூர் தொகுதியில் விஜயை வீழ்த்த 1,000 பேர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பூர் தொகுதியில், த.வெ.க., சார்பில் விஜய்; பா.ம.க., பொருளாளர் திலகபாமா; தி.மு.க., சிட்டிங் எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் போட்டியிடுகின்றனர். அங்கு, தி.மு.க., தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி., கிரிராஜனின் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால், அவரை மாற்றிவிட்டு, இளைஞரணி துணைச் செயலர் ஜோயலிடம், தேர்தல் பணி பொறுப்பை உதயநிதி ஒப்படைத்துள்ளார். அவர், இளைஞர் அணியில் சிறப்பாக பணியாற்றுவோரில், மாவட்ட வாரியாக தலா 10 பேரை தேர்வு செய்துள்ளார். அவர்களுடன் உள்ளூர் நபர்களையும் சேர்த்து 1,000 நிர்வாகிகளை, பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளார். தொகுதியில், 18 முதல் 35 வயது கொண்ட வாக்காளர்களை குறிவைத்து, தி.மு.க., இளைஞர் படை ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை தேர்தல் பணி செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

BHARATH
ஏப் 19, 2026 18:54

பைசாக்கு பிரயோஜனம் இல்லாத தற்குறி


chinnamanibalan
ஏப் 19, 2026 12:39

நடிகர் விஜயை கண்டு, திமுக அஞ்சி நடுங்குவது நன்கு தெரிகிறது.


பிரேம்ஜி
ஏப் 19, 2026 10:56

இவ்வளவு பேர் தேவையேயில்லை! அவரே அவரைத் தோற்கடித்து கொள்ளுவார்!


விஸ்வ நாதன்
ஏப் 19, 2026 10:14

மனித பட்டி இல்லையா