/ செய்திகள் / திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதி; முந்தைய தேர்தலை விட 2 அதிகம்!
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதி; முந்தைய தேர்தலை விட 2 அதிகம்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
நமது நிருபர்
பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக- விசிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2 பொதுத்தொகுதிகள் உட்பட விடுதலை சிறுத்தைக்கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தி.மு.க., கூட்டணியில், நிறைய புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறி நீடித்தது. கடும் இழுபறிக்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு, 28 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொமதேகவுக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.ஓர் அலசல்!
கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள், 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகம், குறைப்பு பற்றிய விவரம்;* காங்கிரஸ் -28 தொகுதி (3 அதிகம்)* முஸ்லிம் லீக் -2 தொகுதி (1 குறைப்பு)* ம.ம.க., -2 தொகுதி (அதே நிலை)* ம.தி.மு.க., -4 தொகுதி (2 குறைப்பு)* கொமதேக - 2 தொகுதி (1 குறைப்பு)* இந்திய கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள் (1 குறைப்பு)* மார்க்சிஸ்ட் - 5 தொகுதிகள் (1 குறைப்பு)* விடுதலை சிறுத்தைக் கட்சி- 8 தொகுதிகள் (2 அதிகம்)தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am