/ செய்திகள் / அமித் ஷாவிடம் நெருக்கமானோர் வைத்த கோரிக்கை

அமித் ஷாவிடம் நெருக்கமானோர் வைத்த கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு திருச்சி வந்தார். தமிழகத்தில் வசிக்கும் தனக்கு நெருக்கமானவர்களுடன், தேர்தல் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, 'சட்டசபை தேர்தலுக்காகவே, தி.மு.க., அரசு 1.31 கோடி மகளிருக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கி உள்ளது. கூடவே, 'தேர்தலுக்கு பின், மாதம் 1,000 ரூபாய் என்பது 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது மக்களை ஈர்த்துள்ளது. மத்திய அரசின் சார்பிலும், 'தமிழக மக்களை ஈர்க்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்; அது, பா.ஜ., கூட்டணிக்கு பலம் சேர்க்கும்' என அமித் ஷாவிடம், அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !