அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைப்பு; இபிஎஸ் அறிவிப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அதிமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்.23ம் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு அதிமுக ஏற்கனவே 297 வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது. தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ், தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்தார்.இந் நிலையில், 297 வாக்குறுதிகளுடன் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும், கட்டுமான தொழிலாளி பணியின் போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட மேலும் 10 வாக்குறுதிகளை அவர் இன்று (ஏப்.21) வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள கூடுதல் வாக்குறுதிகளின் விவரம் வருமாறு; * மா விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, மாம்பழத்திற்கு ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி நடந்து வரும் அத்துக்கட்டு பண்டிகையை பாரம்பரிய முறையில் தொடர்ந்து நடத்துவதற்கு அரசாணை பிறப்பிக்கப்படும்.* கட்டடத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, கட்டடத் தொழிலாளர்கள் பணி செய்யும்போது தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.*பனைத் தொழிலாளர்கள், பனைமரம் ஏறி தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.*அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாகக் குறைக்கப்படும்.*கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் முந்திரி உடைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. அதிகளவிலான பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறிய அளவிலான முந்திரி உடைக்கும் கை கருவி விலையில்லாமல் வழங்கப்படும்.*பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, கண்காணிக்க 24/7 war room மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்படும்.* மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆவதற்காக தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் அமைப்பு ஏற்படுத்தப்படும்.* இளைஞர்கள், இளம் பெண்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு விண்ணப்பித்தால் ஒற்றை சாளர முறையில் 30 நாட்களில் உரிமம் வழங்கப்படுவதுடன், அதற்காக வழங்கப்படும் மானியம் 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.* பணிக்கு செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் வாங்க ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.இவ்வாறு இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இந்த தேர்தல்ல உனக்கு 1 இலக்கம் தாம் , இன்னும் 10 நாளில் உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும் , தயாரா இரு
இத்தனை இலவசத்தை எப்படி கொடுப்பார் என கேட்டதற்கு இவரின் பதில் வரியை உயர்த்தி என பதில் சொல்லியது
என் தமிழ் உறவுகளே இவர்களுக்கு வோட்டு போடாதீர்கள் , அன்னான் சீமானுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்
என் வோட்டு மட்டுமல்ல என் குடும்ப வோட்டு 5 ம் உங்களுக்குத்தான்
உன் தலையில் பெரிய வரி விதிக்கப்படும்
இந்த இலவசத்தை பார்த்தாலே பயம் மக்களுக்கு தெரியுது , அன்புள்ள அப்பா அவர்களே என் வோட்டு மட்டுமல்ல என் குடும்ப வோட்டு 5 ம் உங்களுக்குத்தான் , நீங்கள் 234 தொகுதியிலும் வெற்றி அடையானும் , இந்த கூட்டத்தை தொடச்சி எடுக்கணும் , செய்வீர்களா செய்வீர்களா செய்வீர்களா செய்வீர்களா செய்வீர்களா செய்வீர்களா செய்வீர்களா செய்வீர்களா
போன உங்கள் ஆட்சில என்ன என் கொடுக்கல
உச்ச நீதிமன்றம் இப்படி ஊ மையா போச்சே , இந்த தேர்தலை கேன்சல் பண்ணிட்டு ஒரு 10 வருசத்துக்கு , நீதிமன்றமே அரசை நடத்தட்டும் உச்ச நீதிமன்றம் இப்படி ஊ மையா போச்சே , இந்த தேர்தலை கேன்சல் பண்ணிட்டு ஒரு 10 வருசத்துக்கு , நீதிமன்றமே அரசை நடத்தட்டும் உச்ச நீதிமன்றம் இப்படி ஊ மையா போச்சே , இந்த தேர்தலை கேன்சல் பண்ணிட்டு ஒரு 10 வருசத்துக்கு , நீதிமன்றமே அரசை நடத்தட்டும்
நீ கொடு எல்லாமே இலவசமா ஓடு உன் கட்சி அலுவலகம் , உன் சொத்து இல்லத்தையும் வித்து கொடு , என் வரி பணத்தை புடுங்கி இப்படி நாசம் பண்ண உனக்கு என்ன உரிமை இருக்கு நாடு நாசம் போச்சி
அந்த கேபிள் நிறுவனம் ஏவுளவு லாபத்துல ஓடுதுன்னு தெரியுமா , சும்மா அடிச்சிவிடு ஒய் , வீட்டுக்கு ஒரு கேலிக்காப்டர் , எல்லா ரேஷன் கார்ட் கும் தலைமை செயலகத்துல 3 BHK AC வீடு , தண்ணீர் முதல் எல்லாமே இலவசம் மாசம் 250000 ரூபாய் இப்படி எல்லாமே இலவசமா கொடு .... மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் போகாமலே 12 வருஷம் கழிச்சி படடதாரி பட்டம் அடுத்த 5 வருஷம் கழிச்சி முது நிலை படம் அடுத்த 2 வருஷம் கழிச்சி டாக்டர் பட்டம் இப்படி அடுக்கி கொண்டே போ , நாடு நாசம் போச்சி , உச்ச நீதிமன்றம் இப்படி உமையா போச்சே
அப்ப அம்போதானா
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am