/ செய்திகள் / அழகிரி ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் ஐக்கியம்

அழகிரி ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் ஐக்கியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கருணாநிதி மகன் அழகிரியின் ஆதரவாளரான மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன், இபிஎஸ்ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.கடந்த 2014 ல் மதுரையில் அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.முதல்வர் குடும்பத்துக்கும் அழகிரி குடும்பத்திற்கும் சமாதானம் ஏற்பட்ட நிலையிலும் அழகிரி ஆதரவாளர்கள் யாரும் திமுகவில் மீண்டும் சேர்க்கப்படவில்லை.சில மாதங்களுக்கு முன், தன் வீட்டுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரிடம், ' என் ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்,' என அழகிரி வலியுறுத்தினார்.ஆனால், திமுக தலைமை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் தொடர்ந்து அமைதியாக இருக்கிறது.இனியும் திமுகவை நம்பியிருந்தால் அரசியல் எதிர்காலம் இல்லை என முடிவுக்கு வந்த அழகிரியின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்தனர்.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் துணை மேயர் மன்னன் சென்னையில் இபிஎஸ்ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.இதன் பிறகு மன்னன் கூறுகையில், ' வரும் சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி பெறும். அதற்கு முழு ஒத்துழைப்போம். இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்னும் பலர் அதிமுகவில் இணைவார்கள். திமுகவின் மமதை வரும் தேர்தலில் புரியும். திமுக தொண்டர்கள் குமுறலில் உள்ளனர்.' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !