அன்புமணி துாண்டுதலால் தாக்குதல்: ராமதாஸ் தனி செயலர் குற்றச்சாட்டு
சென்னை: 'பா.ம.க., தலைவர் அன்புமணி, அவரது மனைவி சவுமியா துாண்டுதலின்படி, என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ராமதாசின் தனிச்செயலர் சுவாமிநாதன் கூறியுள்ளார். சென்னை, பாலவாக்கத்தில் வசித்து வரும் அவர், அளித்த பேட்டி: நான் பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தனிச்செயலராக உள்ளேன். கட்சி சார்பாக, ராஜ்யசபா வேட்பாளராக, நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தேன். மனு மீதான பரிசீலனை நடந்த போது அதில் பங்கேற்றேன். அந்த நிகழ்வு முடிந்து, மதியம் 1:00 மணியளவில், சென்னை காமராஜர் சாலை வழியாக வீடு திரும்பினேன். என் கார், நேப்பியர் பாலம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் வழிமறித்து, என் முகத்தில் பலமாக குத்தி தாக்கினர். இதனால், எனக்கு கண் அருகே காயம் ஏற்பட்டு உள்ளது; பார்வையிலும் குறைபாடு ஏற்பட்டு உள்ளது. பா.ம.க., தலைவர் அன்புமணி மற்றும் அவரின் மனைவி சவுமியா துாண்டுதலின்படி, என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே புகார் அளித்து உள்ளேன். என்னை தாக்கிய நபர்கள் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசிலும் புகார் அளிப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm