Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 திருச்சி தி.மு.க., மாநாட்டில் முக்கிய அறிவிப்பு: நேரு

 திருச்சி தி.மு.க., மாநாட்டில் முக்கிய அறிவிப்பு: நேரு

திருச்சி: ''திருச்சி தி.மு.க., மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் அறிவிக்க வாய்ப்புள்ளது,'' என்று அமைச்சர் நேரு கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி: திருச்சி மாவட்டம், சிறுகனுாரில் நாளை மறுதினம், தி.மு.க.,வின், 'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல் லட்டும்' என்ற மாநில மாநாடு நடக்கிறது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். 700 ஏக்கரில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதே இடத்தில் தான் கடந்த 2021ல் மாநாடு நடந்தது. தி.மு.க.,வும் ஆட்சியை பிடித்தது. அதேபோல இம்முறையும் தி.மு.க.,வே ஆட்சியை பிடிக்கும்.

இந்த மாநாட்டில், கடந்த 2021 மாநாடு போலவே, தமிழகத்துக்கான பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார். தி.மு.க.,வின் மாநாடு என்பதால், கூட்டணி கட்சித் தலைவர்கள் அழைக்கப்படுவரா என்பதை கட்சித் தலைமை தான் முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மார் 07, 2026 04:08 pm

K.N.Nehru Sir , we are eagerly waiting for your leader Stalins revolutionary announcements , Like Free Air Tickets once in a year ,Free rail ticket once in six month , Free Cinema tickets once in a week , Concessional Tasmac liquor once in a day

Reply Rate this