வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளது; நயினார் நாகேந்திரன்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''பா.ஜ., வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மையக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:தே.ஜ., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, 27 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்துள்ளோம். இதில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரும் உள்ளது. எந்தெந்த தொகுதி என தற்போது அறிவிக்க முடியாது.வேட்பாளர்கள் பட்டியலை தேசிய தலைமைக்கு அனுப்பி உள்ளோம். தகுந்த வேட்பாளர்களை அவர்கள் தேர்வு செய்வர். ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். வரும் 4ல், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் உட்பட, 67 மாவட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க இருக்கிறார். இவ்வாறு கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am