வட மாநில தொழிலாளர்கள் கஞ்சா வியாபாரிகளா?
'தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் அதிகரிக்க, வட மாநில தொழிலாளர்கள் தான் காரணம்' என, அமைச்சர் அன்பரசனும், தி.மு.க., - எம்.பி., கனிமொழி சோமுவும் பேசியது கண்டனத்திற்குரியது. பிழைப்பு தேடி வரும் ஏழை புலம்பெயர் தொழிலாளர்களை, இதுவரை 'பானிபூரி விற்போர்' என, கிண்டலடித்து, வெறுப்பை விதைத்த தி.மு.க., தற்போது ஒரு படி மேலே சென்று, அவர்களை கஞ்சா வியாபாரிகள் என பழி சுமத்துவது கொடூரமானது. தன் திறனற்ற நிர்வாகத்தால் நேரும் கொடூர குற்றங்கள் துவங்கி, கஞ்சா விற்பனை வரை, அனைத்திற்கும் அப்பாவி வட மாநிலத் தொழிலாளர்களை கைகாட்டி, ஓடி ஒளிந்துகொள்ள தி.மு.க., அரசு முயற்சிப்பது கேவலம். - நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am