அவிநாசி - அத்திக்கடவு திட்டம் 2.0 அ.தி.மு.க. வேட்பாளர் வாக்குறுதி
திருப்பூர்: 'விடுபட்ட குளம், குட்டைகளில் தண்ணீரை நிரப்பும் வகையில், அவிநாசி - அத்திக்கடவு 2வது திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும்,' என, அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் பேசினார். திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர், 2011-16ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார்; ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அப்போது உருவாக்கப்பட்ட, அவிநாசி - அத்திக்கடவு திட்டம், அடுத்த (2016-21) அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சிகளில் உள்ள கிராமப்புற மக்களை சந்தித்து ஆதரவு திரட்டிய, அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன், 'அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்கும் வகையில், 2வது திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் என, உறுதி அளித்துள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் பேசியதாவது: திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கு, 2014ல், மும்முனை மின்சார வசதி செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் குடிநீர் கிடைக்கும் வகையில், 10 ஊராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. நீண்டகால கனவாக இருந்த, அவிநாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட்டது. மானாவாரி நிலக்கடலை மட்டும் விளைந்த கிராமப்புறங்களில், இன்று நெல், வாழை, கரும்பு பயிர் செய்யும் அளவுக்கு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது; 600 அடியிலேயே தண்ணீர் கிடைக்கிறது. அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளிலும் தண்ணீரை தேக்கும் வகையில், அவிநாசி - அத்திக்கடவு 2வது திட்டம், விரைந்து நிறைவேற்றப்படும். இவ்வாறு, அவர் பேசினார். கிராமப்புற மக்களிடம் ஆதரவு திரட்டிய வேட்பாளர், மூதாட்டிகளுக்கு சால்வை அணிவித்து, ஆசி பெற்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am