/ செய்திகள் / உள்ளே கடுப்பு - வெளியே சிரிப்பு: ராகுல், ஸ்டாலின் தனித்தனியே பிரசாரம்

உள்ளே கடுப்பு - வெளியே சிரிப்பு: ராகுல், ஸ்டாலின் தனித்தனியே பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரியில், முதல்வர் ஸ்டாலின், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர், ஒரே மேடையில் பிரசாரம் செய்யாமல், தனித்தனியே பிரசாரத்தில் ஈடுபட்டனர். ராகுல் தன் பேச்சில், முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசுவதை தவிர்த்துள்ளதால், தமிழகத்தில் இருவரின் கூட்டு பிரசாரம் நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்டதற்கு, முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை. தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள்' என திட்டவட்டமாக தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணி இறுதியில் உறுதி செய்யப்பட்டாலும், தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி நீடித்தது. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை தி.மு.க., ஒதுக்க மறுத்தது, காங்கிரஸ் டில்லி மேலிடத்தை எரிச்சல் அடைய வைத்தது. ஸ்டாலின் பிறந்த நாளுக்கு, ராகுல் தாமதமாக வாழ்த்து வெளியிட்டார். ஸ்டாலின் பதிலில் சகோதரர் என குறிப்பிடவில்லை. இது, இருவர் இடையே உரசலை ஏற்படுத்தியது. தற்போது கூட்டணியாக இருந்தாலும், முன்பு போல் சகோதர உறவு இல்லை. தி.மு.க.,வினர் ராகுல் மீதும், காங்கிரசார் ஸ்டாலின் மீதும் அதிருப்தியில் உள்ளனர். அதனால்தான் கடந்த 5, 6ம் தேதி தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருவதை, ராகுல் தவிர்த்துள்ளார். நேற்று காலை, புதுச்சேரியில் ராகுல் பிரசாரம் மேற்கொண்டார். மாலையில், முதல்வர் ஸ்டாலின் தனியே பிரசாரம் செய்தார். இருவரையும் ஒரே மேடையில் பேச வைக்க, புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் முயற்சி எடுக்கவில்லை. புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ராகுல், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தமிழகத்தில் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய, தமிழக காங்கிரஸ் முயன்று வருகிறது. ஆனால், தமிழகத்தில் பிரசாரம் செய்ய, ராகுல் தேதி தராமல் இருப்பதால், பிரசாரத்திற்கு அவர் வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடிக்கடி கேரளாவிற்கு வரும் ராகுல், தமிழக பிரசாரத்திற்கு வராமல் இருப்பது ஏன் எனத் தெரியாமல், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் குழப்பத்தில் உள்ளனர். ஒருவேளை ராகுல் தமிழகம் வந்தால், புதுச்சேரியைப் போல், தனியாக பிரசாரம் மேற்கொள்வாரா அல்லது தேர்தல் வெற்றியை கருதி, முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்வாரா என்ற சந்தேகம், தி.மு.க., கூட்டணியினரிடம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R SRINIVASAN
ஏப் 09, 2026 15:19

மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், கேரளா இந்த மாநிலங்களை தவிர வேறு எங்கும் காங்கிரஸ் 2வது இடத்தில் கூட இல்லை. தமிழக மாபெரும் தலைவர் ஸ்டாலின். ஸ்டாலினை சந்திக்க மறுக்கும் அளவுக்கு ராகுலுக்கு யோக்கியதை கிடையாது


K V Ramadoss
ஏப் 09, 2026 12:42

ராகுலுக்கு ருக்கும் தன்மானமம் கோபமும் , அமித்ஷாவுக்கும் பியூஸ் கோயிலுக்கும் இல்லையே. மத்தியில் ஆட்சி புரியும் பலம் வாய்ந்த பிஜேபி, போயும் போயும் ஒரு மாநில கட்சிக்கு அதுவும் அடசியில் இல்லாத கட்சிக்கு அடிபணிவதா?


sankaranarayanan
ஏப் 08, 2026 02:34

ராகுலுக்கு இப்போது ராகு தசை நடக்கிறதாம் அதனால் அவர்தான் பிரதமாராகவோ அல்லது ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ ஆள்வார் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார் இனி திராவிட மாடல் அரசுக்கு காங்கிரசு ஆதரவே கிடையாதாம் ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுந்தான் காங்கிரசு திராவிட மாடல் அரசுடன் சேருமாம் இது நடக்காத விஷயம்


ramesh
ஏப் 07, 2026 20:51

சகோதரி கமல் போன்று இவரும் மாறிவிட்டாரா?


Ramesh Sargam
ஏப் 07, 2026 20:15

இவர்களும் கூட்டணி என்று கூறித்திரிகிறார்கள். சிரிப்புதான் வருது.


Santhakumar Srinivasalu
ஏப் 07, 2026 19:49

காங். தமிழ் நாட்டில் தேறுமா?


பச்சையப்பன் கோபால் புரம்
ஏப் 07, 2026 17:12

அன்று மெத்த இந்தியாவும் தயங்கி நின்ற போது எங்கள் தங்கத் தள்ளபதி மட்டுமே இளவரசர் ராகுளை அடுத்த பிரதமர் என்று அறிவித்தார். ஆனால் ராகுளே சிரித்தும் நன்றியில்லாமல் தன் கச்சிக்காரர்களை தூண்டிவிட்டு ஆச்சியில் பங்கு என கேட்க வைத்தார். ஆனால் இன்று ஙுங்குக்கூட வழியில்லாவல் அலைகிறார்.


ஆரூர் ரங்
ஏப் 07, 2026 13:59

ராகுல் கிறிஸ்தவக் கல்லூரிகளில் மட்டும் பேசுவார். ஸ்டாலின் நமக்கேன் வம்பு என படித்தவர்கள் பக்கமே போவதில்லை.


T.sthivinayagam
ஏப் 07, 2026 12:40

பாஜகாவிலும் டோல்கேட் குருப்புக்கும் கிரிக்கெட் குருப்புக்கும் உள்ளே கடுப்பு வெளியே சிரிப்பு உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் அடிப்படையில் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


duruvasar
ஏப் 07, 2026 09:54

கூடா நட்பு கேடாய் முடியும் , காங்கிரெஸ்ஸைப்பற்றி முத்துவேல் கருணாநிதி சொன்னது