/ செய்திகள் / சசிகலா வேட்பாளரால் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தோல்வி

சசிகலா வேட்பாளரால் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தோல்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: திருநெல்வேலி தொகுதியில் இருந்து, விருதுநகர் மாவட்டம், சாத்துார் தொகுதிக்கு மாறிய, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சசிகலா கட்சி வேட்பாளரால், அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முன்பே, திருநெல்வேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் நயினார் நாகேந்திரன். அந்தளவுக்கு, திருநெல்வேலி தொகுதிக்கு பரிச்சயமும், மக்கள் ஆதரவும் மிக்கவர். போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வும் ஆகிவிட்டார். இந்த முறை, சாத்துார் தொகுதியை தேர்வு செய்தார். இவருக்கு ஆதரவாக பா.ஜ., தலைவர் நிதின் நபின், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை என, பலரும் பிரசாரம் செய்தனர். இருப்பினும், தி.மு.க., வேட்பாளர் கடற்கரை ராஜிடம் தோற்றுவிட்டார். இடைபட்ட சுற்றுகளில் முன்னிலை வகித்தாலும், 18வது சுற்றுகளுக்கு பின், தொடர்ந்து பின்னடைவை சந்தித்து தோற்றுள்ளார். கடற்கரை ராஜ், 59,127, நயினார் நாகேந்திரன், 53,189, த.வெ.க., அஜித்குமார், 50,499 ஓட்டுகளை பெற்றனர். இவரது தோல்விக்கு முக்கிய காரணம், சசிகலா கட்சி சார்பில் போட்டியிட்ட இசக்கிராஜா, 11,371 ஓட்டுகளை பெற்றது தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !