மகளிர் ஓட்டுக்கு குறிவைக்கும் பா.ஜ.,: ஜெ., பிறந்த நாளில் வரிசைகட்டி வாழ்த்து
சென்னை: முன்னாள் முதல்வரான, மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்னணியில், தமிழகத்தில் உள்ள மகளிர் ஓட்டுகளை முழுதுமாக பெற, பா.ஜ., வியூகம் வகுத்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 5.67 கோடி வாக்காளர்களில், 2.90 கோடி பேர் பெண்கள். இதனால், மகளிர் ஓட்டுகளை கவர, தி.மு.க., - அ.தி.மு.க., இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.31 கோடி பேரின் வங்கி கணக்குகளில், இம்மாதம் முதல் ஏப்., வரை மூன்று மாதங்களுக்கு முன்பணமாக, 3,000 ரூபாய், கோடை கால சிறப்பு தொகையாக, 2,000 ரூபாய் என, 5,000 ரூபாயை தமிழக அரசு கடந்த 13ம் தேதி செலுத்தியது.
அரசு சார்பில் மரியாதை; அமைச்சர்கள் தவிர்த்தனர்
முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோரின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, சென்னை காமராஜர் சாலையில், உள்ள அவரது சிலைக்கும் புகைப்படத்திற்கும், தமிழக அரசு சார்பில், செய்தித்துறை செயலர் ராஜாராமன், கூடுதல் இயக்குநர் பாஸ்கரன், தலைமைச் செயலக செய்தி தொடர்பு அதிகாரி முத்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.ஆனால், அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,விற்கு சென்று அமைச்சராக உள்ளவர்கள் உட்பட, அமைச்சர்கள் யாரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சியை, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தவிர்த்து விட்டனர்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am