/ செய்திகள் / நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும்; கோபியில் செங்கோட்டையனை விளாசிய இபிஎஸ்

நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும்; கோபியில் செங்கோட்டையனை விளாசிய இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோபி: கோபியில் இன்று (ஏப்ரல் 18) தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சரமாரியாக விளாசினார். ''நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும். டிவியில் போட்டு விடுவேன். உங்கள் மீது மனைவியும், மகனும் கேவலமான புகார் கொடுத்தனர். அது பற்றி பேசுவதே என் பதவிக்கு சரியாக இருக்காது,'' என்றார், இபிஎஸ்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ் பேசியதாவது: இப்போது இருக்கும் எம்.எல்.ஏ மாதிரி திமிர் பிடித்தவர் இல்லை, இதுவரை அடிமையாக இருந்தீர்கள், இனிமேல் சுதந்திரக் காற்றை சுவாசிப்பீர்கள். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். இங்கு எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பற்றி பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர், தானாக எம்.எல்.ஏ ஆகவில்லை. அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் எம்.எல்.ஏ ஆனார். ஆனால் சுயநலம், திமிர், அகங்காரத்தால் வெளியேற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால், யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று ஜெயலலிதா பாணியைக் கடைப்பிடித்தோம். கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து ஒருவரைக் கூட என்னைப் பார்க்க விட மாட்டார்.

கேவலமான புகார்

மோசமான குணம் படைத்தவர். பிறர் நல்ல சட்டை போட்டுக்கொண்டால் கூட பிடிக்காது, பொறுக்காது. செங்கோட்டையன் இருக்கும்வரை யாராவது நிம்மதியாக வாழ முடிந்ததா? சிந்து ரவிச்சந்திரனை பொட்டிகட்டி அனுப்பினார். மாவட்ட சேர்மன் ஒருவரும் இவரால் கட்சியை விட்டுப் போய்விட்டார். மரியாதை இல்லாத மனிதர். அனைவரது மனைவியும் புருஷன் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் ஜெயலலிதா இருக்கும்போது அமைச்சராக இருந்தபோது செங்கோட்டையனின் மனைவியும், மகனும் தலைமைச் செயலகம் வந்து புகார் கொடுத்தார்கள். அது, கேவலமான புகார். என்ன புகார் என்று தெரியும் உங்களுக்கு. நான் அப்போது கீழேதான் இருந்தேன், படிக்கட்டில் இருந்து கீழே இறங்கியதும் அவர் பதவியை விட்டு இறக்கிவிட்டார். நகர, ஒன்றியச் செயலாளரோ, கட்சியினரோ புகார் அளிக்கவில்லை, அவரது மனைவி, மகன் புகார் அளித்தனர்.

மோசமான மனிதர்

அந்த புகாரைச் சொல்வது என் பதவிக்கு சரியாக இருக்காது. பிறகு என்னை அழைத்து இப்படிப்பட்ட ஆளை கட்சியில் வைத்திருப்பதே தப்பாப்போச்சு என்றார் ஜெயலலிதா, இதுவரை யாருடைய குடும்பத்தினரும் என்னிடம் இப்படி புகார் கொடுத்ததில்லை. இவரெல்லாம் மோசமான மனிதர் என்றார் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஆளை நான் முதல்வராக இருந்தபோது அமைச்சராக்கினது எனது தப்பு. என்னுடைய அமைச்சரவையில் வந்து கெஞ்சிக் கண்ணீர் விட்டார் மனுஷன், இப்போது வாய்க்கொழுப்பில் பேசுகிறார். நீங்கள் வடித்த கண்ணீர் தெரியாதா? நீங்கள் முதல்வராக இருக்கும்போது நீங்களே எனக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றால் யார் கொடுப்பார்கள் என்று கெஞ்சினார். ஒரு காலத்தில் எனது நண்பராகத்தான் இருந்தார், இவரைப் போல எனக்கு பொய் பேச வேண்டிய அவசியமில்லை. நான் நட்பின் அடிப்படையில் கொடுத்தேன், அந்த மரியாதை உங்களுக்கு இருக்கிறதா?

100 நாட்கள் ஜெயிலில்

ஸ்டாலின், கருணாநிதி படம் இருக்கும் சைக்கிள் வழங்கும் விழாவில் செங்கோட்டைன் கலந்துகொண்டார். அப்போதே பி டீமாக போய்விட்டார். திமுகவின் உளவாளி என்று கண்டுபிடித்தாகிவிட்டது. நீங்கள் சரியான ஆளில்லை, அதிமுக விசுவாசி இல்லை, குழிதோண்டிப் பறிக்கும் உளவாளி என்று கண்டுபிடித்துவிட்டோம். சட்டசபையில் ஒரு வார்த்தை கூட திமுகவை எதிர்த்துப் பேசியது கிடையாது. இவரை வைத்திருக்கலாமா? இவர் மன்னிக்க முடியாத நபர். ஓட்டளித்த உங்களுக்கு அவர் விசுவாசமாக இல்லை. கேவலம், அங்கே போய் துண்டு வாங்குகிறார். யார் போட்டோவை பையில் வைத்திருக்கிறார்? இப்படிப்பட்ட நபர் என்னைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார். 100 நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு வந்திருக்கும் நீங்கள் நல்லவரா ? என் மீதும் கேஸ் போட்டனர்.

ஆட்டமெல்லாம்...

வழக்கை வாபஸ் பெறுவதாகச் சொன்னார்கள், ஆனால், நான் வழக்கை நடத்துவேன் என்று சொல்லி நடத்தி, நிரபராதி என்று உங்கள் முன்பு நிற்கிறேன். செங்கோட்டையன் சிந்திக்க வேண்டும். அசிங்கமாகப் பேசினால், நாக்கு இருக்கிறது என்று பேசினால் ரோட்டில் நடக்க முடியாது, அத்தனை ஆதாரம் வைத்திருக்கிறேன், நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும். நான் முதல்வராக இருக்கும்போதே எடுத்து வைத்துவிட்டேன். எல்லாம் டிவியில் போட்டு விடுவேன்.

ஆட்சி மாறும்; காட்சி மாறும்

நீங்கள் எப்படியும் அதிமுகவை வீழ்த்த திமுகவுடன் சேர்ந்து சதி செய்வீர்கள் என்று தெரியும். ஆட்சி மாறும், காட்சி மாறும், நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்று தெரியும், யாராவது சவுண்ட் விட்டுப் பேசினால் கிட்டேயே போகமாட்டார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். அதிமுக வின்னிங்; நல்லாட்சி கம்மிங். அதிமுக ஆட்சியில் நேரடியாக என்னை சாதாரண மக்களும் வந்து சந்திக்கலாம். தேவையான உதவிகள் 100% செய்துகொடுக்கப்படும். திட்டங்கள் நிறைவேற்ற வாய்ப்பைத் தாருங்கள். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். செங்கோட்டையனை கடுமையாக இபிஎஸ் சாடி பேசினார்.வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

விருமாண்டி
ஏப் 18, 2026 17:14

உங்க கொலை கேஸ் முதல் உங்க பையன், சம்பந்தி அவர்களின் அழுக்கு மூட்டைகளை செங்கோட்டையன் அவிழ்த்து போட்டு வெளுப்பார் என்று கூறப்படுகிறது.


ஆரூர் ரங்
ஏப் 18, 2026 15:56

முன்னாள் அமைச்சர் OP ராமன் கூட கருணாநிதி பற்றி இதே போல ஒரு புகாரை கூறினார். பின்னர் அரசியல் அனாதையாக்கப்பட்டார்.


Senthoora
ஏப் 18, 2026 15:08

செங்கோட்டையர் உங்க கட்சியில் இன்று இருந்தால் இந்த நாறவாய் இதை சொல்லியிருக்குமா? இனி செங்கோட்டையர் நாளைக்கு சொல்வார், ஜெயலலிதா காலில் EPS எப்படி அழுதுபுலம்பினார், ஜெயலலிதா எப்படி EPS ஐ திட்டி கிழித்தார் என்று, சரியானப்போட்டி இனிதான்.


R S BALA
ஏப் 18, 2026 13:46

அப்போ கோட்டையன் ஷோக்கு பார்ட்டியா...


ஆகுயர்த்தோன்
ஏப் 18, 2026 13:35

தமிழர்களை வட மாநில கும்பலுக்கு விற்க துடிக்கும் எடப்பாடியை வருகிற தேர்தலில் டெபாசிட் இழக்க வைப்போம் ... மானமுள்ள தமிழர்கள்


mindum vasantham
ஏப் 18, 2026 14:01

கம்மி சீட் இல் எடப்பாடி அணை போட்டார்


karthik
ஏப் 18, 2026 14:40

200rs udan pirappu


rama adhavan
ஏப் 18, 2026 17:16

ராகுல், இண்டி கூட்டணி எல்லாமே வட நாட்டவர் தானே? அவர்கள் தமிழர்களா?


Raja k
ஏப் 18, 2026 13:16

எடப்பாடி ஒரு பிளாக்மெயில்


Lakshumanan Aruna
ஏப் 18, 2026 13:04

Blackmail செய்துதான் எல்லா தலைவர்களையும் கூட வைத்துக்கொண்டு அதிமுக வுக்கு செயலாளராக இருக்கிறீர்கள் என்று உங்கள் பேச்சின்மூலம் உறுதியாகிறது.


ஆகுயர்த்தோன்
ஏப் 18, 2026 12:44

மகளிர் இட ஒதுக்கீடு தனி மசோதாவாக இருந்திருந்தால், கண்டிப்பா வெற்றி பெற்றிருக்கும். ஏனென்றால், பெரும்பான்மையான காட்சிகள், திமுக உட்பட, ஆதரித்துதான் பேசின. இதுடன் தொகுதி மறுவரையை சேர்த்தால்தான், தோல்வியடந்தது. பிஜேபியின் திட்டம் தவிடு பொடியானது


Perumal Pillai
ஏப் 18, 2026 12:38

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் கீழ்த்தரமான விஷயத்தில் செங்கோட்டையன் ஆட்டம் போட்டதால் ஜெயலலிதா வால் விரட்டியடிக்கப்பட்டார். இவர் தற்போது இருக்கும் கட்சி அந்த விசயத்திற்கு ரொம்ப பேமஸ்.


Rathna
ஏப் 18, 2026 12:28

65 வயதில், வயதிற்கு மீறிய விளையாட்டால் ஜெயலலிதா நீக்கினார். அதை நீங்கள் ஏன் சேர்த்துக்கொண்டீர்கள். அதனால் தான் நன்றியுடன் பேசுகிறார்.