/ செய்திகள் / ஆன்லைன் வாயிலாக தினமும் பிரசாரம்; கூட்ட நெரிசலை தவிர்க்க விஜய் வியூகம்

ஆன்லைன் வாயிலாக தினமும் பிரசாரம்; கூட்ட நெரிசலை தவிர்க்க விஜய் வியூகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கூட்ட நெரிசலை தவிர்க்க, 'ஆன்லைன்' வாயிலாக பிரசாரம் செய்ய, த.வெ.க., தலைவர் விஜய் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க., சார்பில், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அக்கட்சித் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

கடும் நெரிசல்

பெரம்பூர் தொகுதியில் மனு தாக்கல் செய்துவிட்டு, கொளத்துார் தொகுதியில் பிரசாரத்திற்கு சென்றபோது, கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், விஜய்க்கும், அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, தன் பிரசாரத்தை விஜய் ரத்து செய்தார். நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட, அவர் மனு தாக்கல் செய்தார். அங்கும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர்; கால் வைப்பதற்கு கூட இடமில்லாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது. இருந்தபோதும், மாநிலம் முழுதும் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டு இருந்தார். ஆனால், கூட்ட நெரிசலால் அசம்பாவிதம் ஏற்படுவதை விஜய் விரும்பவில்லை. இதனால், ஆன்லைன் பிரசாரத்திற்கு மாற, விஜய் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்து பார்க்க வேண்டும் என குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு, கட்சி தலைமை பலமுறை அறிவுறுத்தி உள்ளது.

20 நிமிடங்கள்

ஆனால், அதை பொருட்படுத்தாமல், விஜய் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூடுகின்றனர். இதனால், உயிர் இழப்பு அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க விஜய் நினைக்கிறார். அதனால், ஆன்லைன் வாயிலாக பிரசாரத்தை முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார். தினமும் 20 நிமிடங்கள் வரை ஆன்லைனில் பேச அவர் விரும்புகிறார். இப்படி செய்வதால், ஓரிடத்தில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். இப்படி விஜய் ஆன்லைனில் பேசுவதை, த.வெ.க., பிரசாரக் கூட்டங்களில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஈசன்
ஏப் 03, 2026 19:25

நெடும் காலமாக இரட்டை இலை, உதய சூரியன், இந்த இரண்டை தவிர வேறு சின்னங்கள் அவ்வளவு எளிதில் மக்கள் மனதில் பதியாது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவின் சின்னங்கள் தற்போது தான் மெள்ள மெள்ள அறிமுகமாகின்றன. மற்ற கட்சிகளின் சின்னங்களின் நிலை கவலைக்கிடமே. தவேகாவின் விசில் சின்னம் ஏதோ ஒரு சுயேச்சை சின்னம் என்பது போல் தான் தற்போதைய நிலவரம். இந்த லட்சணத்தில் இவர் ஆன்லைனில் பிரசாரமாம். அதுவும் கூட்ட நெரிசலை தவிர்கவாம். கூட்டம் வந்தால் தான் அந்த வேட்பாளருக்கு விளம்பரம் என்று விஜய்க்கு யாராவது சொல்லுங்கப்பா.


Easwar Kamal
ஏப் 03, 2026 18:56

நோகாம நொங்கு சாப்பிடணும் அதுதானே உன் பிளான். சும்மாவா வச்சு இருக்கானுவ பனையூர் paniyaar. விஜய்க்கே தெரியும் தன்னை தவிர வேறு ஏவானும் தேரர் மாட்டானுவ எதுக்கு இந்த வேகாத வெயிலில் சுத்தி உடம்பை கெடுத்தாகணும். இங்கே தெரியுது விஜய் mind வாய்ஸ்.


Govi
ஏப் 03, 2026 18:40

ஒரு இடம் கூட வராது இது உறுத


ஜெகதீசன்
ஏப் 03, 2026 17:38

சரியான மற்றும் நாகரீகமான அணுகுமுறை. சமூக வலைதளம் அனைவரது கைகளையும் சென்றடைந்து விட்ட இந்த கால கட்டத்துல ஆட்டு மந்தை மாதிரி மக்கள் கூடுவது அபத்தம். வேட்பாளர் மட்டும் வீதி வீதியாக பிரச்சாரம் பண்ணினால் போதும்.


VSMani
ஏப் 03, 2026 14:02

நல்ல வியூகம். சீமானும் விஜயும் சேர்ந்து கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயம் திமுக அதிமுக டெபாசிட் இழந்திருக்கும்.


பச்சையப்பன் கோபால் புரம்
ஏப் 03, 2026 12:19

பேரரிஞர் ? அண்ணாவுக்கே டீயும் பக்கோடாவும் வாங்கிக் கெடுத்தவர் எஹ்ர பாரம்பரியம் கொண்டவர் எங்கத் தங்க தள்ளபதியாக்கும்.தள்னபதி செய்த சாதனைகளுக்கு உட்கார்ந்த இடத்திலேயே வேட்டு வரும் எள்ராலும் வீதி விதியாய் சென்று வேட்டு சேகரிக்கிரார் தள்ளபதி.தற்குரிகளுக்கு ஆசையைப் பாரு.ஆண்லைனில் பிரச்சாரம் பண்ணி பெண்கள் ஒட்டு வாங்க முடியுமா???


vbs manian
ஏப் 03, 2026 09:35

விரும்பியோ விரும்பாமலோ இவர் போகும் இடங்களில் அசம்பாவிதம் நடக்கிறது. சதியாக கூட இருக்கலாம். நவீன விஞ்ஞான யுக்திகளை இவர் கையாளலாம். பெரிய t v screen மக்கள் கூடும் இடங்களில் நிறுவி control ரூமிலிருந்து பேசலாம். you tube whats app மூலம் live ஆக பிரச்சாரம் செய்யலாம். வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது. sms மூலம் குறுந்செய்தி அனுப்பலாம்.


Sun
ஏப் 03, 2026 09:30

அமேசான், பிளிப்கார்ட் மாதிரியாக ஆன்லைனில் கட்சியை நடத்தும் அளவிற்கு தமிழக அரசியல் தரம்கெட்டுப் போய் விட்டதா என்ன? தலைவன், தொண்டன் என்ற பிணைப்பே அவர்களை நேரில் களத்தில் சந்தித்து அவர்களுடன் அளவளாவுவதுதான். தற்குறிகள் எல்லாம் தன்னைத் தலைவன் என மக்களிடம் முன்னிறுத்திக் கொண்டால் இப்படித்தான் எல்லாமே தலை கீழாக நடக்கும்.


Murug Mani
ஏப் 03, 2026 08:47

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய எவருக்கும் இந்தத் தேர்தல் கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும். இனி அரசியலில் ஈடுபடவோ அல்லது இந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காணவோ கூடாது என்பதற்கு இது அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு இந்த நடிகர் மீண்டும் நடிக்கச் செல்வார், மேலும் அவர்களின் இரண்டாம் நிலை ஆட்கள், ஏதேனும் இருந்தால், தங்களின் முந்தைய தொழில்களைத் தொடர்வார்கள். சமூக ஊடகங்கள்/தொலைபேசி அழைப்புகளில் அவர்கள் செய்யும் அனைத்து வசவுகளையும் நமது சைபர் குற்றப் பிரிவு கண்காணிப்பதால், அவரது ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஒரு முக்கியப் பிரச்சினை உள்ளது. அவர்கள் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும், மேலும் அவர்களின் பிரச்சினைகளிலிருந்து வெளிவர அவர்களின் கட்சியைச் சேர்ந்த எவரும் அவர்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். இந்த நடிகரும் அரசியல்வாதியுமானவர் 10/12 ஆம் வகுப்பை முடித்தாரா இல்லையா என்பதும், அவர்களின் இரண்டாம் நிலை/மாவட்ட அளவிலான தலைவர்களில் பெரும்பாலோர் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்களா இல்லையா என்பதும் எனக்குத் தெரியாது. இந்த ஆட்கள் சட்டமன்ற உறுப்பினர்/நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களாக விரும்புகிறார்கள். தமிழ்நாட்டிற்கு இது என்னவொரு கதி/அவமானம். அதிகாரப்பூர்வ ஆவணங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை இந்த ஆட்கள் புரிந்துகொள்கிறார்களா இல்லையா? இந்த வெறித்தனமான ஆதரவாளர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்: நீங்கள் மாறாத வரை அல்லது சரியாகச் சிந்திக்காத வரை எதுவும் மாறாது. பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள். அவர்கள் சமூக சேவைக்காக இங்கு வரவில்லை அங்கு அவர்கள் சிறிய தொகையைச் செலுத்தி, கறுப்புப் பணத்தில் பெரும் தொகையை அறுவடை செய்ய விரும்புகிறார்கள். இந்த நடிகர் தனது நடிப்புக்காக எழுத்துப்பூர்வமாகப் பணம் வாங்கியுள்ளார் தணிக்கையாளர் அறிக்கையில் வெள்ளைப் பணம் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இவரோ தூய்மையான அரசியல் பற்றிப் பேசுகிறார்.


vijay
ஏப் 03, 2026 08:24

சரியான கூட்டணி அமைந்திருந்தால் அரியணை ஏறி இருக்கலாம்


பெரிய ராசு
ஏப் 03, 2026 10:50

ஒரு காசிலராக கூட ஆகமுடியாது