பிரதமர் மோடியை பயங்கரவாதி என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினாரா?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''எதிர்க்கட்சியினரை மிரட்டுவதால், பிரதமர் மோடியை பயங்கரவாதி என குறிப்பிட்டேன்,'' என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். சென்னையில் நேற்று அவர் பேட்டியளித்தபோது, மோடியை 'பயங்கரவாதி' என குறிப்பிட்டார். அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அதற்கு கார்கே விளக்கம் அளித்தார்.
'ராகுலும் ஸ்டாலினும் மன்னிப்பு கேட்கணும்'
மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், சென்னையில் அளித்த பேட்டி: நாட்டு மக்களால், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடியை 'பயங்கரவாதி' என்கின்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கே அப்படி கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் மோடியை 'பயங்கரவாதி' என அழைத்து அவமதிக்கும் அளவுக்கு, காங்., மற்றும் தி.மு.க., கீழ்த்தரமாக இறங்கியதை நினைத்து வெட்கப்படுகிறேன்.பிரதமரை தாக்குவதன் வாயிலாக, ஒட்டு மொத்த இந்தியர்களையும், பயங்கரவாதிகள் என்று அழைப்பதாகவே அர்த்தமாகிறது. பிரதமருக்கும், அவருக்கு ஓட்டளித்த மக்களுக்கும் இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பிற்காக, ராகுலும், ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவர்களின் கொடூர ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தால், தேர்தல் முடிவு தீர்மானிக்கப்பட்டு விட்டது. பிரதமர் மோடி மீதான தனிப்பட்ட தாக்குதல், அதை மாற்றப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am