/ செய்திகள் / விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகர் போட்டி

விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகர் போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.நீண்ட இழுபறிக்கு பின்னர், இந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. அக்கட்சிக்கு 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந் நிலையில் இந்த 10 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.இம்முறை விஜயகாந்த் எம்ஏல்ஏவாக வெற்றி பெற்ற விருத்தாசலத்தில் அவரின் மனைவியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா வேட்பாளராக போட்டியிடுகிறார். மகன் விஜய பிரபாகரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.எஞ்சிய தொகுதிகளின் வேட்பாளர்கள் விவரம் வருமாறு; தருமபுரி - இளங்கோவன்சேலம் மேற்கு - அழகாபுரம் மோகன்ராஜ்ஓமலூர் - இளங்கோவன்மைலம் - வெங்கடேசன்பல்லாவரம் - அனகை முருகேசன் திருத்தணி - கிருஷ்ணமூர்த்தி குடியாத்தம் - பிரதாப் போளூர் - சரவணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !