சென்னையில் 13 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடி போட்டி!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை; சென்னையில் திமுக 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 13 தொகுதிகளில் அதிமுக- திமுக நேரடியாக மோதுகிறது.அந்த தொகுதிகள் மற்றும் இரு கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்; 1. துறைமுகம் திமுக - சேகர்பாபு அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை2. தியாகராய நகர் திமுக - ராஜா அன்பழகன் அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை3. ராயபுரம் திமுக - சுபேர்கான் அதிமுக - ஜெயக்குமார் 4. எழும்பூர்(தனி) திமுக - தமிழன் பிரசன்னா அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை5. விருகம்பாக்கம் திமுக - பிரபாகர் ராஜா அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை6. திருவிக நகர் (தனி) திமுக - கே.எஸ். ரவிச்சந்திரன் அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை7. அண்ணாநகர் திமுக - சிற்றரசு அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை 8. வில்லிவாக்கம் திமுக - கார்த்திக் மோகன் அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை 9 ஆயிரம் விளக்கு திமுக - எழிலன் அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை 10. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக - உதயநிதி அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை 11. ஆர். கே. நகர் திமுக - கே. ஜெ. எபினேசர் அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.12. கொளத்தூர் திமுக - முதல்வர் ஸ்டாலின் அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை 13. மதுரவாயல் திமுக - காரம்பாக்கம் கணபதி அதிமுக - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லைமொத்தத்தில் தலைநகர் சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக 13 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.வேளச்சேரியில் அதிமுகவை எதிர்த்து திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக அமைச்சர் மா. சுப்ரமணியன் போட்டியிடும் சைதாப்பேட்டையில் அதிமுகவின் கூட்டணியான டிடிவி தினகரனின் அமமுக களம் காண்கிறது. மயிலாப்பூரில் பாஜவும், திமுகவும் நேருக்கு நேர் மோதுகிறது. பெரம்பூர் தொகுதியில் திமுகவை எதிர்த்து அதிமுகவின் கூட்டணியான பாமக களம் காண்கிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am