சர்ச்சுகளில் மனமுருகி துரைமுருகன் பிரார்த்தனை!
காட்பாடி: ஈஸ்டர் பண்டிகையையொட்டி, காட்பாடி சர்ச்சுகளில் அமைச்சர் துரைமுருகன் பிரார்த்தனை செய்து, கிறிஸ்துவர்களிடம் ஓட்டு சேகரித்தார்.வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் போட்டியிடுகிறார். அவர், தொகுதி முழுதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.ஈஸ்டர் தினத்தன்று காட்பாடி பர்னீஸ்புரம், கழிஞ்சூர், காங்கேயநல்லுார் பகுதி சர்ச்சுகளுக்கு, துரைமுருகன் நேரில் சென்றார். அங்கு திரண்டிருந்த கிறிஸ்துவர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.சர்ச்சுகளில் நடந்த ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் துரைமுருகன் பங்கேற்றார். கிறிஸ்துவ பாதிரியார்கள் துரைமுருகனுக்கு ஆசி வழங்கினர். கிறிஸ்துவர்களுக்கு, அமைச்சர் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am