/ செய்திகள் / தில்லுமுல்லு செய்ய திமுக திட்டம்: தவெக முறையீடு

தில்லுமுல்லு செய்ய திமுக திட்டம்: தவெக முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஓட்டு எண்ணிக்கையின்போது, தில்லுமுல்லு செய்ய, திமுக திட்டமிட்டுள்ளது என, தேர்தல் கமிஷனிடம், தவெக முறையிட்டுள்ளது. தவெக இணை பொதுச் செயலர் நிர்மல்குமார், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து, மனு அளித்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டி: ஓட்டு எண்ணிக்கையில், தில்லுமுல்லுகளை செய்து, குளறுபடிகளை ஏற்படுத்த, திமுக முயற்சி செய்து வருகிறது. எனவே, ஓட்டு எண்ணிக்கை அறையில், மத்திய பாதுகாப்பு படையினரை, கூடுதலாக பணி அமர்த்த வேண்டும். தபால் ஓட்டுகள், யாரிடமிருந்து எங்கிருந்து வருகிறது என்பதை, பதிவேட்டில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். தபால் ஓட்டு எண்ணிக்கையை, 'வீடியோ' பதிவு செய்து, அதை கட்சிகளுக்கு வழங்க வேண்டும். தபால் ஓட்டுகளை 'ஸ்கேன்' செய்ய வேண்டும். தபால் ஓட்டுகள் எண்ணி முடித்து பின், இயந்திரத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கையின், கடைசி இரண்டு சுற்றுகளை தொடர வேண்டும் என, கோரிக்கை வைத்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

விசை சோசப்பு, பனையூர்
ஏப் 30, 2026 13:39

இதெல்லாம் சும்மா. நாடகம். இவர் எதிர்ப்பு ஓட்டுக்களை பிரித்து டீ மூ கா விற்கு மடை மாற்றிய வேலையை செவ்வனே செய்து கொண்டார். பி டீம்


முருகன்
ஏப் 30, 2026 07:13

உன் கட்சி பத்து தொகுப்பில் வெற்றி பெற்றால் பார்ப்போம் எதற்கு எடுத்தாலும் திமுக திமுக என்று


guna
ஏப் 30, 2026 16:36

உண்மைய சொன்னா திருடனுக்கு வேர்க்குது ...


Kasimani Baskaran
ஏப் 30, 2026 04:10

திராவிடம் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் தில்லுமுல்லு தான் அடிப்படை. ஓட்டுக்காக தேர்தல் நேரம் பெரியார் என்ற வார்த்தையை பெரியவர் என்று கூட போட்டுக்கொள்வார்கள்.


Raj
ஏப் 30, 2026 03:05

உண்மை தான் முதலில் SIR யை எதிர்த்த திமுக பின் மௌனம் காத்தது அதனால் இந்த தேர்தலில் தில்லு முள்ளு நடக்க 200% வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் ஆணையம் இறுதியில் தான் அதிகாரிகளை மாற்றினார்கள்.


xyzabc
ஏப் 30, 2026 02:15

Better to be careful with the dmk goons.


Matt P
ஏப் 30, 2026 00:16

எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது நல்லது தானே.


Roy
ஏப் 29, 2026 23:44

TVK is finding reasons for their defeat, laying stone for blame game