/ செய்திகள் /  தி.மு.க.,வினர் ரூ. 200 பட்டுவாடா; குறட்டை விடும் பறக்கும் படை

 தி.மு.க.,வினர் ரூ. 200 பட்டுவாடா; குறட்டை விடும் பறக்கும் படை

பொங்கலுார்: பொங்கலுார் பகுதியில், பிரசாரத்துக்கு வரும் தி.மு.க.,வேட்பாளரை வரவேற்க, தலைக்கு, 200 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில் தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராஜ் போட்டியிடுகிறார். இவர், தற்போது பல்லடம் வட்டாரம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பல்லடம் தொகுதி, கண்டியன்கோவில் கிராமத்தில், தி.மு.க., நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாக சென்று, வரவேற்புக்கு வந்தால் 200 ரூபாய்; ஆட்டோவில் பிரச்சாரத்துக்கு வந்தால் 500 ரூபாய் தருவதாக கூறி பொதுமக்களை அழைத்து வந்தனர். இதனால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவரை வரவேற்க திரளான மக்கள் நேற்று காத்திருந்தனர். வேட்பாளர் செல்வராஜ் வேனை விட்டு இறங்கி மக்களோடு நின்று குறைகளை கேட்டார். பணம் பட்டுவாடா செய்ததால், செல்வராஜ் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு குக்கிராமத்திலும் அவரை வரவேற்க காத்திருந்த பொதுமக்களை கணக்கெடுத்தனர். அவர் கிளம்பியவுடன் வரிசையில் நிற்க வைத்து தலைக்கு, 200 ரூபாய் பட்டுவாடா செய்தனர். 'இங்கு பட்டுவாடா செய்யக்கூடாது' என்று போலீசார் நிர்வாகிகளை விரட்டினர். இருப்பினும், தி.மு.க.,வினர் தங்கள் வேலையை கச்சிதமாக செய்தனர். 'தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் கண்கொத்தி பாம்பாக கண்காணிப்பதெல்லாம் ஆடு, மாடு விற்று பணத்தை எடுத்துச் செல்லும் அப்பாவி மக்களை தான். கட்சியினர் மூட்டை மூட்டையாக பணத்தைக் கொண்டு வந்து பட்டுவாடா செய்கின்றனர். இதை கண்டுகொள்ளாமல், பறக்கும் படை குறட்டை விட்டு துாங்குகிறதா' என, பலர் கேள்வி கேட்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Nandakumar Naidu
ஏப் 09, 2026 00:12

ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழக தேர்தல் ஆணையம் விலை போய்விடுகிறது.


ram
ஏப் 08, 2026 14:27

திருட்டு திமுக ஆட்கள் கொள்ளை அடித்தது இருபது லட்சம் கோடிகளுக்கு மேல் இன்னுமா இந்த இருநூறு, அதை வாங்கும் அடிமைகள், கேட்டால் படித்த மாநிலம் என்று சொல்லிக்கொண்டு திரியவேண்டியது.


karmegam M
ஏப் 08, 2026 12:58

வேட்பாளர் யார் வந்தாலும் சரி.அவர் வரும் வரை காத்திருந்து வந்த பின்னர் வழியனுப்பி வைக்கும் வரை அந்த நேரத்திற்கான கூலி தான் அந்த 200 ரூபாய் அதை ஏன் மக்கள் வாங்க கூடாது.


கருணாநிதி தக்ஷிணாமூர்த்தி, திருக்குவளை
ஏப் 08, 2026 12:33

சட்டசபையை அவசரமாக கூட்டி தீ மூ கா வினரை வைத்து தேர்தல் ஆணையரை கண்டித்து பதவி நீக்கம் செய்ய தீர்மானம் இயற்ற வேண்டும். அப்படியே நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டி தேர்தல் ஆணையரை நீக்கம் செய்ய தீர்மானம் தீ மூ கா கொண்டு வர வேண்டும். மமதை பேகம் குற்றசாட்டு க்கு மதிப்பளித்து இதை உடனே செய்ய வேண்டும்.


Tetra
ஏப் 08, 2026 12:32

பறக்கும்‌படை யாரு. மத்திய தூறையா? இல்லியே. மாநில அதிகாரிகள்தானே. எப்படி பிடிப்பார்கள். கள்ள அரசினால் கள்ளத்தனமாக வந்தவர்கள்தானே


Dr S Venkatraman
ஏப் 08, 2026 12:28

பேப்பரில் போட்டோ போட அரசியல் வாதி களை பேருக்கு சோதனை செய்வார்கள். மற்றபடி பாதிப்பு பொது மக்களுக்கு மட்டுமே.


PVSR
ஏப் 08, 2026 10:54

i பறக்கும் படை ஒரு வேஸ்ட் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும்.


M Ramachandran
ஏப் 08, 2026 10:38

அதெல்லாம் பறக்கும் படையை நல்ல வே கவனச்சாட்சி யப்பா. அந்த சிவப்பு கருப்பு தாலிய பாகையை துண்டு கண்டால் ஸலாம் போட்டு வேறு பக்கம் என்று விடுவார்கள்.


RAVINDRAN.G
ஏப் 08, 2026 09:42

மளிகை கடை அண்ணாச்சி , ஆடு மாடு காய்கறி பழம் விற்கும் வியாபாரிகள், மருந்து வாங்க சிகிச்சைக்கு மருத்துவமனை செல்லும் நோயாளிகள் இவர்களிடம்தான் பறக்கும் படை தன் அதிவீர பராக்கிரமத்தை காட்டுவார்கள். ஒரு அரசியல்வாதியை கூட கண்ணால பார்த்தாலும் கும்பிடு போட்டு வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் தண்டம்.


V Venkatachalam, Chennai-87
ஏப் 08, 2026 08:45

கூட்டுக் களவாணிங்க குறட்டை தானே விடுவாங்க. பறக்கும் படை கிட்டேயே துண்டு சீட்டுல எந்த வழியா எவ்ளோ பணம் போச்சிங்குற கணக்கு கச்சிதமா இருக்குமே.