திமுக ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்: அண்ணாமலை
சென்னை: திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். இதுகுறித்து அவரின் எக்ஸ் பதிவு; தமிழகத்தில், பல ஆயிரக்கணக்கான கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களே, திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியின் அவலத்துக்கு சாட்சி.திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.சட்டம் ஒழுங்கைக் காத்து தமிழகத்தை மீட்க, தூக்கி எறிவோம் மக்கள் விரோத திமுக ஆட்சியை. வாக்களிப்போம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த பதிவுடன் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பது பற்றி தேர்தல் பிரசாரத்தின் போது தாம் பேசிய வீடியோ ஒன்றின் சிறு பகுதியையும் அண்ணாமலை இணைந்துள்ளார். அதில் தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள், பாலியல் அத்துமீறல்களை கண்டித்தும் அவர் பேசி உள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am