/ செய்திகள் / த.வெ.க., விஜய் சொல்வதெல்லாம் சாத்தியமற்றது: மார்க்சிஸ்ட்

த.வெ.க., விஜய் சொல்வதெல்லாம் சாத்தியமற்றது: மார்க்சிஸ்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம், ''பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் போடுவேன்; தாய்மாமன் சீர் கொடுப்பேன் என த.வெ.க., தலைவர் விஜய் சொல்வது சாத்தியமற்றது,'' என்றார்.சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில், சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது.பின், சண்முகம் கூறியதாவது: பா.ஜ., கட்சி தமிழகத்தில் காலுான்ற தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பது, எங்களின் முக்கியமான முதல் நோக்கம். எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, இரண்டாவது முக்கியமான நோக்கம்.மாநில அரசின் நிதி நிலைமை, மாநில அரசின் அதிகாரம் உள்ளிட்டவற்றை வைத்து, எங்கள் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை வைத்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்பது போல், பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் உள்ளன. 'பிறக்கும் குழந்தைகளுக்கும் மோதிரம் போடுவேன்; தாய்மாமன் சீர் கொடுப்பேன்' என, த.வெ.க., தலைவர் விஜய் சொல்வது சாத்தியமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் மாநில அரசு வழங்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் மாணவர் பேரவை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் மது உற்பத்திக்கு உச்ச வரம்பு விதிக்க வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மற்றும் உறுதுணையாக இருப்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தல்கள், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Arul Narayanan
ஏப் 07, 2026 18:27

100 மி.கிராமில் ஒரு வளையம் ஒரு கண்ணாடி கல் வைத்து போட்டால் மோதிரம் ஆகி விடும். செலவை இன்னும் குறைக்க வேண்டும் என்றால் 18 கேரட் போதும். சண்முகம் பாட்டாளி. இதெல்லாம் அவருக்கு தெரியாது போலும். பாவம்.


balasubramani
ஏப் 07, 2026 14:23

ஐயா நீங்க கட்சியை அடமானம் வச்சிட்டீங்க நீங்க எல்லாம் பேசக்கூடாது


R.Kumaresan
ஏப் 07, 2026 10:00

தி மு க வின் 8000ரூ கூப்பன் திட்டமும் சாத்தியமற்றது... பிரிஜ் வாங்க 8000 ரூ போதுமா போதாது..


V Venkatachalam, Chennai-87
ஏப் 07, 2026 09:35

கள்ள சாராயம் கேஸுங்களுக்கு தலைக்கு 10 லட்சம் கவர்மெண்ட் பணத்துலேயிருந்து குடுக்குறவன்களால முடியும். மத்தவிங்களால குடுக்க முடியாதுங்குறது நெஜந்தான்.ஆனா திருட்டு தீயமுக காரனுங்க அடிக்குற டாஸ்மாக் கொள்ளையை கவர்மெண்ட்டுக்கு திருப்பி உட்டா மோதிரம் என்ன நெக்லஸே குடுக்கலாம. காம்ரேடுகள் அதைப் பத்தி பேச மாட்டானுங்க.


Sudha
ஏப் 07, 2026 09:28

ஆமாம், எல்லா குழந்தைகளுக்கும் சுத்தி அரிவாள் செஞ்சட்டையை குடுக்கலாம்


Sudha
ஏப் 07, 2026 09:26

ஆமாம், பிறக்கும் குழந்தைகளுக்கு லெனின் ஸ்டாலின் மார்க்ஸ் என்று பெயர் வைப்பது ம‌ட்டுமே சாத்தியம்


VENKATASUBRAMANIAN
ஏப் 07, 2026 08:46

கம்யூனிஸ்ட்கள் பேசுவதிற்கு அருகதை அற்றவர்கள்


Rajan A
ஏப் 07, 2026 08:40

கம்ரேட்ஸ் எல்லாம் நல்ல ரேட்டுக்கு விலை போனதை பற்றி என்ன சொல்வார்கள்?


Rajan A
ஏப் 07, 2026 08:38

தீம்கா தேர்தல் வாக்குறுதிகளை பற்றி வாய் திறக்காதவர்கள்


vbs manian
ஏப் 07, 2026 08:29

ஆமாம். கூப்பன் டிராக்டர் லேப்டாப் பிரிட்ஜ் மட்டுமே சாத்தியம்.