/ செய்திகள் / 4 நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும்; டில்லியில் இபிஎஸ் பேட்டி
4 நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும்; டில்லியில் இபிஎஸ் பேட்டி
நமது டில்லி நிருபர்
4 நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும். தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசினேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார். இது குறித்து நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு சூழல் இல்லை. திமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் எல்லாம் சேர்ந்துவிட்டன.4 நாட்களில்
தொகுதி பங்கீடு குறித்து பேச மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை (மார்ச்.21) சென்னை வருகிறார். 4 நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும். தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசினேன். திமுக தலையிலான கூட்டணி மாதிரி எங்கள் கூட்டணி கிடையாது. அமைதியாக, அழகாக கூட்டணி பேச்சு முடிவு பெற்று தொகுதிகள் வெளியிடப்படும். எந்த சிக்கலும் இல்லை. எங்களுக்குள் விட்டு கொடுத்து, யாருக்கு எங்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அந்த தொகுதிகளை அவர்கள் பெறுவது தான் எங்கள் நோக்கம். தமிழகத்தில் அதிமுக 31 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளது. பல தேர்தல்களை சந்தித்துள்ளது.வெற்றி வாய்ப்பு
எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை கொடுத்து இருக்கிறோம். 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டமும் வரவில்லை. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. தினந்தோறும் கொலை, கொள்ளை நடக்கிறது. பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. ஒரு வாரத்தில் எங்களது தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதிமுக ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் போய் கொண்டு இருக்கிறது. 3 முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்துள்ளார். தேர்தல் பிரசாரம் கூட்டம் பிரமாண்டமாக நடந்துள்ளது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am