தேர்தலுக்கு பின் நல்ல செய்தி; மோடி உறுதியால் ராஜா மகிழ்ச்சி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில், கடந்த ஜன., 30ல், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு மாத சிகிச்சைக்கு பின், வீடு திரும்பிய அவர் , அரசியல் நடவடிக்கை களில் இருந்து விலகி, ஓய்வெடுத்து வருகிறார்.இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக, புதுச்சேரி வந்த பிரதமர் மோடி, நேற்று முன்தினம் சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது மோடியின் அழைப்பின் பேரில், அவரை ராஜா சந்தித்து பேசினார். ராஜாவின் உடல் நலன், சிகிச்சை குறித்து மோடி அக்கறையுடன் கேட்டறிந்தார்.தமிழக அரசியல் நிலவரம், தேர்தல் பணிகள் குறித்தும் கேட்டறிந்த மோடி, 'சட்டசபை தேர்தல் முடிந்ததும், உங்களுக்கு நல்ல செய்தி வரும்' என ராஜாவிடம் கூறியுள்ளார். இதனால், ராஜா மகிழ்ச்சியாக இருப்பதாக, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am