பா.ஜ.,விடம் ஒரு தொகுதி கேட்கிறது ஹிந்து மக்கள் கட்சி
சென்னை: 'ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் போட்டியிடுவதற்காக, ஒரு தொகுதி வழங்க வேண்டும்' என, அக்கட்சி சார்பில், பா.ஜ.,விடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு ஹிந்து மக்கள் கட்சியினர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஹிந்து மக்கள் கட்சி, பல ஆண்டுகளாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. தமிழகம் முழுதும், தேசியவாத மற்றும் கலாசார விழுமியங்களை வலுப்படுத்த, அடிமட்ட அளவில் பணியாற்றி வருகிறது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில், 90 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு சதவீத ஓட்டுகளைப் பெற்றது. இது, கட்சியின் அடிமட்ட ஆதரவு தளத்தை பிரதிபலிக்கிறது. எனவே, இந்த சட்டசபை தேர்தலில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் போட்டியிடும் வகையில் திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை அல்லது, துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் போட்டியிடும் தொகுதி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am