/ செய்திகள் / ஓசூர் சென்டிமென்ட்: ஒதுங்கிய ஸ்டாலின்

ஓசூர் சென்டிமென்ட்: ஒதுங்கிய ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர் தொகுதி சென்டிமென்டை தி.மு.க., நம்புவதால், வேப்பனஹள்ளி தொகுதியில் தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க.,விற்கு தனியாக ஒரு 'சென்டிமென்ட்' உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், ஓசூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த காலங்களில், வேட்பாளர்கள் வெற்றி - தோல்வியை தாண்டி, அக்கட்சி ஆட்சி அமைக்கவில்லை. பிரசாரம் செய்ய வராத தேர்தல்களில் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 1991ல், தி.மு.க., கூட்டணி பலத்துடன் போட்டியிட்ட ஜனதா தள் வேட்பாளர் வெங்கடசாமியை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தார். கடந்த 2001 தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் வெங்கடசாமிக்கு ஆதரவாகவும், 2011ல், காங்., வேட்பாளர் கோபிநாத்திற்கு ஆதரவாகவும் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இந்த தேர்தல்களில், தி.மு.க., ஆட்சி அமைக்கவில்லை. கடந்த 2019ல், தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. அதில் ஓசூரும் ஒன்று. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தி.மு.க., ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. அதை மனதில் வைத்து, ஓசூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க., வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றார். ஆனால், தமிழக அளவில், தி.மு.க.,வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அதாவது, 1989, 1996, 2006, 2021 சட்டசபை தேர்தல்களில், கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஓசூர் பிரசாரத்திற்கு வரவில்லை. அத்தேர்தல்களில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனால், ஓசூர் தொகுதியில் பிரசாரம் செய்தால் ஆட்சியமைக்க முடியாது என்ற, 'சென்டிமென்ட்' உள்ளது. இத்தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் வரும் 19ம் தேதி ஓசூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு இடங்கள் பார்க்கப்பட்டு, கடைசியில் வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஓசூர் பகுதி, 'சென்டிமென்ட்' காரணமாக, வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இடத்தை தேர்வு செய்துள்ளதாக தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். ஏனெனில், முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம், ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளி 'தால்' நிறுவனத்திற்கு வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கோபசந்திரம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வரும் வழியில், ஓசூர் தொகுதிக்கு உட்பட்டு பல இடங்கள் பொதுக்கூட்டம் நடத்த ஏதுவாக உள்ளன. ஆனால், 'ஓசூர் சென்டிமென்ட்' காரணமாக, வேப்பனஹள்ளி தொகுதிக்கு பொதுக்கூட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் பார்வையில் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் படக்கூடாது என்பதற்காக, அவருக்கு நேர் எதிரே திரை கட்டப்பட்டிருந்தது. அதையடுத்து தற்போது ஓசூர் சென்டிமென்ட்டும் பேசுபொருளாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

krishna
ஏப் 17, 2026 20:31

ENNA IDHU


வில்லிபுத்தூரான்
ஏப் 17, 2026 17:18

பகுத்தறிவு பல்லிளிக்கும் நேரம்.ஊருக்கு மட்டும் உபதேசிக்கும் இவர்கள் ஜாதி வெறி மத வெறியை வளர்த்து, கோவில் காசை கொள்ளையடித்து தாங்கள் மூட நம்பிக்கையில் திளைத்து ஊரை ஏமாற்றுகிறார்கள்.


பைரவன்
ஏப் 17, 2026 14:36

பகுத்தறிவு எல்லாம் ஊருக்குத் தான் உபதேசம். அவர்களுக்கு அது தேவையில்லை. தேர்தலில் ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவார்கள். மூட நம்பிக்கையை ஒழிப்போம் என்பார்கள். ஓசூரில் பேசினால் ஆட்சி அமைக்க மாட்டோம் என்பது மூட நம்பிக்கை இல்லை. வேரோடு பறித்து எறிய வேண்டியது தீய திருடர்கள் முன்னேற்ற கலகம்.


duruvasar
ஏப் 17, 2026 14:25

கால் கட்டை விரலில் மட்டும் நின்றுகொண்டு பேசினாலும் கால் பங்குங்குமேல் தேறவே தேறாது


Madras Madra
ஏப் 17, 2026 13:27

இதுதான் திராவிட பகுத்தறிவு சிந்தனை திராவிட மாடல்


Amsi Ramesh
ஏப் 17, 2026 13:12

ஓசூர் இந்தமுறை உங்களுக்கு படம் புகட்டும் விடியல் முதல்வரே


sasidharan
ஏப் 17, 2026 11:49

என்னதான் தலை குப்புற நின்றாலும் ஆட்சி மாற்றம் உறுதி


ராஜ்
ஏப் 17, 2026 10:16

சனாதனம் என்ன ஆச்சு ? இதெற்க்கெல்லாம் சனாதனம் ஓரம்கட்டி வைக்கப்படுமா? இவர்கள் எல்லாம் ஏமாற்றுபேர்விரிகள்.


Anbuselvan
ஏப் 17, 2026 08:58

திராவிட மாடல் ஒரு பகுத்தறிவு மாடல். அப்படியே அந்த வீரமணி ஐயாவையும் அந்த கூட்டத்தில் சேர்த்து கொண்டால் நன்றாக செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகும்


GSR
ஏப் 17, 2026 08:17

அது செண்டிமெண்ட் அல்ல விஞ்ஞானம். ஓசூர் பகுதியில் அனைத்து மக்களும் உள்ளனர் - மக்கள் ரெஸ்பான்ஸ் இவர்களுக்கு இருக்காது. அது பிரச்சாரத்திற்கு பிந்தைய மக்கள் பேச்சுக்களில் நெகட்டிவாக பிரதிபலிக்கும் போது நடுநிலையான ஓட்டுகள் பாதிக்கப்படும்


வில்லிபுத்தூரான்
ஏப் 17, 2026 17:19

ஓசூர் தமிழகத்தில் தானே உள்ளது.ஏன் அங்கு பிரச்சாரம் செய்ய தைரியம் இல்லை?