3வது முறையாக வேட்பாளர் மாற்றம்: அதிருப்தியில் ஓசூர் த.வெ.க.,
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கி ருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியின் த.வெ.க., வேட்பாளர் என, மஞ்சுநாத் என்பவரை கட்சித் தலைவரான நடிகர் விஜய் அறிவித்தார். ஆனால், அவர் போட்டியிடாமல் விலகியதால், மஞ்சுநாத்துக்கு பதிலாக அம்பரீஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடைசி நேரத்தில், த.வெ.க.,வின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலர் வேந்தர்க்கரசன் என்ற வடிவேல், நேற்று முன்தினம் த.வெ.க., வேட்பாளராக, வேட்புமனுவை தாக்கல் செய்தார். வடிவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னணியில், த.வெ.க.,வில் அண்மையில் இணைந்த, சூளகிரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மது ஹேம்நாத் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது அழுத்தம் காரணமாகவே, த.வெ.க., தலைமை கடைசி நேரத்தில் வடிவேலை வேட்பாளராக அறிவித்துள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am