சீட் தராவிட்டாலும் தேர்தல் பணி செய்வேன்
விஜயகாந்த் உயிருடன் இருக்கும் வரை, தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி அமைக்கவில்லை. தற்போதைய சூழலில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை பார்த்தால், மிகவும் பாவமாக உள்ளது. தன்னை யாராவது சேர்த்துக்கொள்வரா என, முயற்சி மேற்கொண்டு வருகிறார். தி.மு.க., - காங்கிரஸ் இடையே பிரச்னைகள் உள்ளன. த.வெ.க., தலைவர் விஜய், காங்கிரசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இதனால், காங்கிரசுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த பின், தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து சொல்ல முடியும். சீட் கொடுக்காவிட்டாலும் தேர்தல் வேலையை பார்ப்பேன். - குஷ்பு, துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am