தி.மு.க., வென்றால்... அன்புமணி எச்சரிக்கை
சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் நாளை நடக்கும் சட்டசபை தேர்தல், நீதிக்கும், அநீதிக்கும் இடையிலான போர். கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில், குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதும், படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. பெண்களுக்கு எதிராக 44,418 குற்றங்களும், குழந்தைகளுக்கு எதிராக 62,489 குற்றங்களும் நடந்துள்ளன. இன் னொரு முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை, ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. தி.மு.க., 6 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளது. தி.மு.க.,வுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால், ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுரண்டி விடுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am