ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
மதுரை செல்லுாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன், 41, டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். உள்ளூரில் நிலவும் சாலை சேதம், குடிநீர் பிரச்னை என பல பிரச்னைகள் குறித்தும் போராடி வருபவர். கடந்த 2021 சட்டசபை, 2022 மாநகராட்சி, 2024 லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது, மதுரை வடக்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். சமூக ஆர்வலராக இருப்பதால், இந்த முறை தனது பிரசாரத்தை வித்தியாசமாக செய்ய நினைத்துள்ளார். அதனால், தத்தனேரி சுடுகாட்டில் உள்ள மயான காளி முன்பு, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுக்கவும், தேர்தலில் தோல்வி அடையவும் சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த பல வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am