பிரசாரத்திற்கு வாங்க... வெற்றிலை பாக்குடன் அழைப்பு
தேர்தல் பிரசாரங்களில் பொதுவாக வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு, கட்சி நிர்வாகிகள் தனியாக பணம் கொடுப்பது வழக்கம். ஆனால், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் தொகுதியில், வித்தியாசமாக 'கவனிப்பு' நடக்கிறது. தி.மு.க., வேட்பாளர் சாமிநாதன் செல்லும் கிராமங்களில், தி.மு.க., நிர்வாகிகள், முதல் நாளே ஒவ்வொரு வீடாக சென்று, மறுநாள் நடக்க உள்ள பிரசாரத்திற்கு வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கும்படி, வெற்றிலை - பாக்கு தட்டுடன் அழைக்கின்றனர். அவ்வாறு அழைக்கும்போதே ஒவ்வொரு பெண்ணுக்கும் 100 ரூபாய் கொடுத்து விடுகின்றனர். மறுநாள் பிரசாரம் நடக்கும் இடத்தில், ஆரத்தி தட்டுடன் பங்கேற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு, தலா 50 ரூபாய் பாகுபாடின்றி கொடுத்து விடுகின்றனர். இந்த உத்தியில், ஆரத்தி தட்டு எடுக்க விரும்பாதவர்களும், முதல் நாள் 'கவனிப்பால்' மறுநாள் பிரசாரத்திற்கு வந்து விடுவதால், பிரசாரத்தின் போது கூட்டம் அதிகளவில் கூடுகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am