ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திண்டுக்கல்: இந்த தம்பி நல்லா பேசுறாரு; ஆனா ஜெயிக்க மாட்டேங்குறாரு என்று ஒரு அம்மா சொல்லி இருக்கிறது. இது என்ன ஓட்டப்பந்தயமா நானா ஓடி ஜெயிப்பதற்கு, இது ஓட்டு பந்தயம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: என் இனத்திற்கு ஒரு சாபம் இருக்கிறது; இதற்கு கடந்த கால காயமும் இல்லை; எதிர்கால கனவும் இல்லை. நிகழ்கால தேவை தான். '' சீமான் நல்ல தான் பேசுறான். ஒரு அம்மா சொல்லி இருக்கிறது.''இந்த தம்பி நல்லா பேசுறான்; ஆனால் ஜெயிக்க மாட்டேங்குறான். இது என்ன ஓட்டப்பந்தயமா நானா ஓடி ஜெயிப்பதற்கு, இது ஓட்டு பந்தயம்; போட்டால் தான் ஜெயிக்க முடியும்.மக்கள் அனைவரும் சும்மா இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்; இலவச மிக்சி கொடுத்துவிட்டால், அதில் எதை அரைப்பது? கிரைண்டரில் எதை ஆட்டுவது, பிரிட்ஜ் கொடுத்தால் அதில் எதை வைப்பது, உங்கள் வீட்டில் திருடிவிட்டு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வாங்குவீர்களா? ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்காமல் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் கூட்டணியும், இலவச அறிவிப்புகளும் தேவையில்லை. இவ்வாறு சீமான் பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am