மன்சூர் வீடு எங்கள் சொத்து
தி ருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில், நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுகிறார். வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அவரது முகவரியாக, '2/11, 4வது தெரு, திருக்குமரபுரம், அரும்பாக்கம், சென்னை' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், 2,328 சதுர அடி பரப்புள்ள வீட்டை, தனது இரு மனைவியரின் சொத்தாக மன்சூர் அலிகான் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த வீடு தங்களின் சொத்து என்று பாரி என்பவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: அரும்பாக்கத்தில் உள்ள எங்களது வீட்டை, மன்சூர் அலிகான் அபகரித்துவிட்டு திருப்பி தர மறுத்தார். இது தொடர்பாக நாங்கள் தொ டர்ந்த வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பு வரும் வரை வீட்டை யாரும் பயன்படுத்த முடியாதபடி, 'சீல்' வைக்க உத்தரவிட்டது, அதன்படி வீடு பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, லால்குடி சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி, திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am