தேர்தலில் பண மழை: ஜனநாயகமா, பணநாயகமா?
சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் பணம் வாரி வழங்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகமா, பணநாயகமா. இதை தேர்தல் கமிஷன் தடுக்க இயலாத நிலையில் உள்ளதா? வேட்பாளர்களிடமிருந்து பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டால் கூட, தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. இதை தடுக்கும் வலிமை பொருந்தியதாக தேர்தல் கமிஷன் இல்லையா? வேட்பாளர்கள் போட்டி போட்டு பணத்தை மழையாக பொழிந்துள்ளனர். சாமானியன் அரசியலுக்கு வரும் வாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. நடுநிலையோடு தேர்தல் கமிஷன் செயல்பட முடியாத ஒரு நிலை, கவலை அளிக்கிறது. தேர்தலில் பணம் தருவது தடுக்கப்பட வேண்டும்; இல்லையெனில், ஜனநாயகம் படுகொலை செய்யப்படும். தேர்தல் கமிஷனுக்கு என, தனி அலுவலர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். - கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம் கட்சி
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am