/ செய்திகள் / அமைச்சர் பதவி கேட்கக்கூடாது; துரைமுருகனுக்கு கண்டிஷன்
அமைச்சர் பதவி கேட்கக்கூடாது; துரைமுருகனுக்கு கண்டிஷன்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: 'அமைச்சர் பதவி வேண்டாம் என ஒப்புக்கொண்டால் மட்டுமே, இம்முறை 'சீட்' வழங்கப்படும்' என, அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
10 முறை போட்டி
தி.மு.க., பொதுச்செயலராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளவர் துரைமுருகன். இவர், ராணிப்பேட்டை மற்றும் காட்பாடி சட்டசபை தொகுதிகளில், 10 முறை போட்டியிட்டு எட்டு முறை வெற்றி பெற்று உள்ளார்.முதுகெலும்பு முறிவு
இதனால், முதுகெலும்பு முறிவுக்கு சிகிச்சை எடுத்த கையோடு, தன் உடலை வருத்தி, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் துரைமுருகன் ஆர்வமாக பங்கேற்றார்; அடுத்தடுத்து நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதையடுத்து, தன் நிலையை மாற்றிக்கொண்ட தி.மு.க., தலைமை, அவருக்கு சீட் கொடுக்க முன்வந்திருக்கிறது. ஆனால், கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அமைச்சர் பதவி கிடையாது என்ற தகவலை துரைமுருகனுக்கு சொல்லி அனுப்பி உள்ளனர். ஆனால், அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am