எதுவும் கிடைக்காது: உற்சாகத்தில் பழனிசாமி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
- நமது நிருபர் -சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க., அதிருப்தி அணிக்கு, த.வெ.க., அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கும் செய்திகள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை ரொம்பவே குஷியாக்கி இருக்கின்றன. அதிருப்தி அணி எம்.எல்.ஏ.,க்களுக்கு போன் செய்து, 'நான் தான் அப்பவே சொன்னேனே... அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. அவர்களை நம்பி போனால், நற்றாற்றில் தான் நிற்க வேண்டும் என்றேன். என் பேச்சை கேட்டிருந்தால், கட்சிக்கு விசுவாசமாக இருந்தீர்கள் என்ற பெயர் கிடைத்திருக்கும். இப்போது கூட ஒன்றும் கெட்டு போகவில்லை; நம்ம பக்கம் வந்து விடுங்கள்' என பழனிசாமி பேசி வருகிறார். அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்பது உறுதியானால், பழனிசாமி பக்கம் பலரும் வர வாய்ப்பு இருக்கிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am