/ செய்திகள் / பென்னாகரத்தில் மகனை எதிர்க்க ஜி.கே.மணிக்கு ராமதாஸ் நெருக்கடி

பென்னாகரத்தில் மகனை எதிர்க்க ஜி.கே.மணிக்கு ராமதாஸ் நெருக்கடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளார். மகன் அன்புமணிக்கு எதிராக தனித்து செயல்பட்டு வரும் ராமதாஸ், சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதுவரை, 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ராமதாஸ் அறிவித்துள்ளார். தர்மபுரியில் போட்டியிடும் அன்புமணியின் மனைவி சவுமியாவை எதிர்த்து, சரவணன் என்பவரை ராமதாஸ் நிறுத்தியுள்ளார். பா.ம.க.,வுக்கு தற்போதுள்ள ஐந்து எம்.எல்.ஏ.,க்களில் ஜி.கே.மணி, அருள் ஆகியோர், ராமதாஸ் பக்கம் இருந்தனர். அருள், மீண்டும் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ.,வாக உள்ள பென்னாகரம் தொகுதிக்கு, ராமதாஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஜி.கே.மணியின் மகனும், ராமதாசால் கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டவருமான தமிழ்க்குமரன், காங்கிரசில் இணைந்துள்ளார். அவர், காங்கிரஸ் சார்பில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்க்குமரனை கட்சியிலிருந்து நீக்கியுள்ள ராமதாஸ், ஜி.கே.மணியை பென்னாகரத்தில் போட்டியிட வலியுறுத்தி வருகிறார். ஆனால், மகனை எதிர்த்து போட்டியிட அவர் தயங்குவதாக கூறப்படுகிறது. 'மகனை காங்கிரசுக்கு அனுப்பி விட்டு நாடகமாடுகிறார்' என, அவரை அன்புமணி ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !