/ செய்திகள் /  குன்றத்தில் பிரியாணி சமைத்த தி.மு.க., வேட்பாளருக்கு எதிர்ப்பு

 குன்றத்தில் பிரியாணி சமைத்த தி.மு.க., வேட்பாளருக்கு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி ருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டசபைத் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., அப்துல் சமது போட்டியிடுகிறார். இவர் கடந்த நான்கு நாட்களாக தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், மருங்காபுரி வடக்கு ஒன்றிய பகுதியில் பிரசாரம் செய்ய, தேனுார் கிராமத்துக்கு சென்றபோது, 'வேட்பாளர் அப்துல் சமது திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சமைத்தவர்; உள்ளூர்காரர் இல்லை; ஐந்து ஆண்டுகள் எதுவும் செய்யவில்லை' என்று கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர், வாகனங்களை நிறுத்தி பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தனர். தி.மு.க.,வினர் பேச்சு நடத்தியும் பலனில்லை. பிரசாரம் ரத்தானது. அதேபோல், பிரான்பட்டி, வலசுப்பட்டி கிராமங்களில் வேட்பாளருடன் வந்த கரூர் எம்.பி., ஜோதிமணியையும் முற்றுகையிட்ட மக்கள், ஐந்து ஆண்டுகளாக ஏதும் செய்யவில்லை. ஆகையால் இங்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வேட்பாளர் அப்துல் சமது, ஜோதிமணி எம்.பி., ஆகியோர், அங்கு ஓட்டு கேட்காமல் சென்றனர். புத்தாநத்தம் கிராம பஞ்சாயத்தை இரண்டாக பிரித்ததைக் கண்டித்து, வெள்ளையக்கவுண்டன்பட்டி கிராம மக்கள், நேற்று சாலையில் உட்கார்ந்து, வேட்பாளர் அப்துல் சமது ஊருக்குள் வரக்கூடாது என்று கூறி போராட்டம் நடத்தினர். அப்போது வேட்பாளர் ஆதரவாளர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rajasekar Jayaraman
ஏப் 12, 2026 08:34

மறைமுக தேர்தலிலும் ஓட்டு போட பயப்படும் கோழை இந்துக்களுக்கு ஒரு வார்த்தை இப்படி வாழ்வதை விட இறந்து போகலாம் நீங்கள் உங்கள் முன்னோர்கள் இது போல் பயந்து இருந்தால் இந்துக்களாக வாழ்ந்து இருக்க முடியாது


sankaranarayanan
ஏப் 12, 2026 06:40

மக்கள் இந்த தொகுதிகளில் சரியான பாடம் புகட்டிவிட்டார்கள் இனி இது போன்றே தமிழ்நாடு முழுதும் மக்கள் அந்தந்த தொகுதிக்கு ஒன்றுமே செய்யாமல் இப்போது வாக்கு கேட்க வரும் எந்த கட்சி வேட்பாளர்களையும் அந்தந்த கிராமம் நகர எல்லைக்குள்ளேயே அனுமதிக்காதீர்கள் இது ஒரு பாடம் மக்கள் இனி முட்டாட்கள் இல்லை அரசாங்க பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற ஆட்களை இனி தேர்ந்தெடுக்காதிர்கள் இது நாடு முழுதும் பரவட்டும் அப்போதாவது அரசியல்வாதிகள் திருந்துவார்கள்


Kasimani Baskaran
ஏப் 12, 2026 06:06

சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் என்ன ஆனார்கள்?


Priyan Vadanad
ஏப் 12, 2026 02:14

ஓட்டு கேட்டு வரும்போது வீட்டில் பிரியாணி செய்து எதிர்ப்பை காட்டலாமே. வீட்டில் பிரியாணி செய்யுங்கள் என்று சொன்ன மாதிரியும் இருக்கும். பிரியாணி சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்.


SUBBU,MADURAI
ஏப் 12, 2026 03:39

அப்பத்துக்கு மதம் மாறிய கிறிஸ்தவரான நீ எங்கள் இந்து மதத்தில் தலையிட்டு எந்த கருத்தையும் சொல்ல வேண்டாம் .