எல்லை கடந்து பேசுகிறார் பழனிசாமி
தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டு வருகிறோம். சில பேர் ஒருமையில் பேசி ஓட்டு கேட்டு வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வயதுக்கு தகுந்த பேச்சை பேசவில்லை. தோல்வியின் வெளிப்பாடாக எல்லை கடந்து பேசுகிறார். அவருக்கு பேச மட்டும் தான் தெரியும், செயல்பட தெரியாது. தேர்தலுக்குப் பின், அவர் பேசப் போவதில்லை. சாதனையை சொல்லி பேச எதுவும் இல்லாததால், அடுத்தவர்களை விமர்சித்து பழனிசாமி பேசி வருகிறார். தமிழக சட்டம் - ஒழுங்கு பற்றி வெட்கமே இல்லாமல், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பேசுகின்றனர். துாத்துக்குடி துப்பாக்கி சூடு, பொள்ளாச்சி பாலியல் சம்பவம் ஆகியவை கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தன. ஆனால், சட்டம் - ஒழுங்கு பற்றியும், மகளிர் பாதுகாப்பு குறித்தும் கூச்சமே இல்லாமல் எதிர்க்கட்சி தலைவர் பேசி வருகிறார். - செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர், தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am